ரஜினியை பார்க்க கூட விரும்பாத விஜய்.. பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்காமல் பெருசாக்கும் தளபதி

Rajini and vijay: எப்பொழுது சூப்பர் ஸ்டார் பட்டம் விஜய்க்கு என்று ஒரு வதந்தி கிளம்பியதோ, அப்போதிலிருந்து ரஜினியும் விஜய்யும் எதிரும் புதிருமாக ஆகிவிட்டார்கள். அடுத்தடுத்து நீயா நானா என்று போட்டி போட்டுப் பார்க்கும் அளவிற்கு இவர்கள் நடித்த படங்கள் யாருடையது அதிக வசூலை கொடுக்கிறது என்பதை வைத்து தீர்மானித்து வருகிறார்கள்.

இந்த சூழலில் தற்போது ரஜினி அவருடைய 170 படத்தை ஜெய் பீம் இயக்குனர் ஞானவேல் ராஜாவுடன் கூட்டணி வைத்து இருக்கிறார். அதுபோலவே விஜய்யும் அவருடைய 68வது படத்தை வெங்கட் பிரபுவுடன் கூட்டணி வைத்திருக்கிறார். இப்படத்திற்கான படப்பிடிப்பு தற்போது சென்னை பிரசாந்த் ஸ்டூடியோவில் நடந்து வருகிறது. இதில் ட்ரெயின் செட்டப்பை போட்டு சூட்டிங் போய்க்கொண்டிருக்கிறது.

அதே இடத்தில் ரஜினியின் 170 ஆவது படத்தின் சூட்டிங் நடைபெற இருக்கிறது. இதனை கேள்விப்பட்டதும் விஜய் இவருடைய சூட்டிங்கை கோகிலம் ஸ்டுடியோக்கு மாற்றிவிட்டார். அதற்கு காரணம் ரஜினியை சந்திக்க விரும்பவில்லை என்பதினால். ஆனால் இதை ஒரு சான்ஸ் ஆக பயன்படுத்தி விஜய், ரஜினியை சந்தித்து இருந்தால் இதுவரை ஏற்பட்ட பிரச்சனைகள் அனைத்துக்கும் ஒரு தீர்வு கிடைத்திருக்கும்.

Also read: ரஜினி கொளுத்திப் போட்ட அணுகுண்டு.. கொஞ்சம் கூட யோசிக்காமல் செய்த வேலை

ஆனால் இதை விரும்பாத விஜய், ரஜினி வருவதற்குள் மொத்த படப்பிடிப்பையும் வேறு ஒரு இடத்திற்கு மாற்றி விட்டார். ஆனால் ரஜினியோ, சென்னை பிரசாந்த் ஸ்டூடியோவில் விஜய் படம் சூட்டிங் போய்க் கொண்டிருக்கிறது என்று தெரிந்தும் வர சம்மதித்திருக்கிறார் என்றால் அவருக்கு விஜய்யை சந்திப்பதில் எந்தவித பிரச்சனையும் இல்லை என்பது ரஜினியின் பெருந்தன்மையை காட்டுகிறது.

இதைதான் சொல்வார்கள் அனுபவத்திற்கும் வயசுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. இந்த ஒரு விஷயத்திலேயே ரஜினி எப்படிப்பட்டவர் என்பதை நிரூபித்துக் காட்டி விட்டார். ஒருவேளை விஜய் வழக்கம் போல் அதே இடத்தில் சூட்டிங் வைத்திருந்தால் ரெண்டு பேரும் நேரடியாக சந்தித்திருக்கலாம்.

ஆனால் தற்போது விஜய் இப்படி செய்ததால் இவர்களுக்குள் இருக்கும் பிரச்சனை இப்போதைக்கு ஓய்வதாக தெரியவில்லை.  இதனால் இவர்கள் மட்டும் பாதிப்படையவில்லை, இவர்களுடைய ரசிகர்களும் சண்டை போட்டு வருகிறார்கள் என்பதுதான் மிகவும் வருத்தமான ஒரு விஷயமாக இருக்கிறது.

Also read: போற போக்கில் கொளுத்தி போட்ட அண்ணாச்சி.. விஜய்யையும், ரஜினியையும் வச்சி செஞ்ச லெஜெண்ட்