இனியாவை தும்சம் செய்யும் புத்தம் புது சீரியல்.. பாக்கியலட்சுமியை தொடர்ந்து விஜய் டிவி ரீமேக் செய்யும் சூப்பர் ஹிட் பெங்காலி தொடர்

டிஆர்பி-யில் எப்போதுமே மோதிக் கொள்ளும் சன் டிவி மற்றும் விஜய் தொலைக்காட்சிகள் சின்னத்திரை ரசிகர்களை கவர்வதற்காக புத்தம் புது சீரியலை அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

அந்த வகையில் விஜய் டிவியின் ராஜா ராணி சீரியல் பிரபலமான ஆலியா மானசாவை சன் டிவி தட்டி தூக்கி இருக்கிறது. விஜய் டிவியில் இருந்து சன் டிவிக்கு சென்ற ஆலியா மானசா தற்போது இனியா என்கின்ற புத்தம் புது சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

Also Read: மாலத்தீவில் ஹனிமூன் கொண்டாடும் பாக்கியலட்சுமியின் மருமகள்.. கலர் கலராய் வெளியான புகைப்படம்

இப்போது இந்த சீரியலுக்கு ஆப்பு வைக்கும் அளவுக்கு விஜய் டிவி பக்கா பிளான் போட்டு, சூப்பர் ஹிட் அடித்த பெங்காலி தொடரினை தமிழ் ரீமிக்ஸ் செய்த ஒளிபரப்ப போகிறது. ஏற்கனவே விஜய் டிவியின் டாப் சீரியல் ஆன பாக்கியலட்சுமி சீரியலும் சூப்பர் ஹிட் அடித்த ‘ஸ்ரீ மோயி’ என்ற பெங்காலி மொழி தொடரின் மறு ஆக்கம் தான்.

அதேபோன்று தான் தற்போது Gaatchora என்ற பெங்காலி சீரியலை விஜய் டிவி தமிழில் ரீமேக் செய்து ஒளிபரப்பு போகிறது. இதில் கதாநாயகனாக ஏற்கனவே விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘சிப்பிக்குள் முத்து’ என்ற சீரியலின் கதாநாயகன் ஜெய் மற்றும் கதாநாயகியாக தர்ஷினி கௌடா இணைந்து நடிக்கப் போகின்றனர்.

Also Read: பரபரப்பாக நடந்த தேர்தல், வெற்றி யாருக்கு?. பாக்கியலட்சுமியில் எதிர்பாராத டுவிஸ்ட்

இந்த புத்தம் புது சீரியலை குறித்து தற்போது சின்னத்திரை ரசிகர்கள் ஆர்வத்துடன் தெரிந்து கொள்வதுடன், இன்னும் சில தினங்களில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி நிறைவடைய போவதால், அதற்குமுடிந்த பிறகு இந்த சீரியல் ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதுமட்டுமின்றி விஜய் டிவியை உதறிவிட்டு சன் டிவிக்கு சென்ற ஆலியா மானசாவிற்கு பதிலடி கொடுப்பதற்காகவே இந்த புத்தம் புது சீரியல் துவங்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. இதன் பிறகு சன் டிவியின் இனியா சீரியலை இந்தப் புத்தம் புது சீரியல் டிஆர்பி-யி தும்சம் செய்யும் என்று விஜய் டிவி பிளான் போட்டு இருக்கிறது.

Also Read: விஜய் டிவி முடிவு செய்த பிக் பாஸ் டைட்டில் வின்னர்.. மக்கள் மனசுல இருக்கிறத உளறி கொட்டிய பிரியங்கா

- Advertisement -spot_img

Trending News