டிஆர்பி-யில் டாப் 5 இடத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட விஜய் டிவி சீரியல்கள்.. அடித்து நொறுக்கும் சன் டிவி

சின்னத்திரை ரசிகர்கள் எந்த சீரியலை விரும்பி பார்க்கிறார்கள் என்பதை அந்த வர டிஆர்பி லிஸ்டில் தெரிந்துவிடும். அப்படி இந்த வாரத்திற்கான டிஆர்பி ரேட்டிங் லிஸ்ட் தற்போது இணையத்தில் வெளியாகி கலக்கிக் கொண்டிருக்கிறது.

வழக்கம்போல் சன் டிவி சீரியல்கள் தான் டாப் 5 இடத்தை பிடித்திருக்கிறது. முதலிடம் சன்டிவியின் கயல் சீரியலுக்கும், 2-வது இடம் சுந்தரி சீரியலுக்கும், 3-வது இடம் வானத்தைப்போல சீரியலுக்கும், 4-வது இடம் கண்ணான கண்ணே சீரியலுக்கும், 5-வது இடம் ரோஜா சீரியலுக்கும் கிடைத்துள்ளது.

Also Read: தற்கொலைக்கு தூண்டும் பிரபல சீரியல்.. டிஆர்பி-யை ஏத்த இதெல்லாம் ஒரு பொழப்பா!

இப்படி தொடர்ந்து 5 இடங்களை ஆக்கிரமித்துக் கொண்ட சன் டிவி மற்ற எந்த சேனல்களின் சீரியல்களையும் உள்ளே விடாமல் கடும் போட்டியாக மாறி இருக்கிறது. விஜய் டிவியின் ஒரு சில சீரியல்கள் டாப் 5 இடத்தை பிடிக்கும்.

ஆனால் கடந்த சில வாரங்களாக விஜய் டிவி சீரியல்கள் டல் அடித்துக் கொண்டிருக்கிறது. ஆகையால் முன்பு டாப்-5 இடத்தில் இருக்கும் விஜய் டிவி சீரியல்கள் ஆன பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி, ராஜா ராணி2, பாரதி கண்ணம்மா போன்ற சீரியல்கள் அனைத்தும் தூக்கி எறியப்பட்டு இருக்கிறது.

Also Read: மீண்டும் சீரியலில் நடிக்கப் வரும் ஆலியா.. இந்த வாட்டி விஜய் டிவிக்கு ஆப்பு

இதன் தொடர்ச்சியாக 6-வது இடம் மீண்டும் சன்டிவியின் எதிர்நீச்சல் சீரியலுக்கும் கிடைத்திருக்கிறது. 7-வது இடம் தான் விஜய் டிவியின் பாக்கியலட்சுமிக்கும், 8-வது இடம் பாரதிகண்ணம்மாவிற்கும், 9-வது இடம் பாண்டியன் ஸ்டோர்ஸ்க்கும், 10-வது இடம் ராஜா ராணி2 சீரியலுக்கும் கிடைத்திருக்கிறது.

இன்னும் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப விஜய் டிவி சீரியல்களில் சுவாரசியம் ஏற்பட்டால் மட்டுமே டிஆர்பி-யில் முன்னேற்றமடையும். அப்படி இல்லை என்றால் கடந்த இரண்டு வாரங்களாக டிஆர்பி ரேட்டிங் லிஸ்டில் இருப்பது போன்றே டாப் 5 இடத்தில் சன் டிவி சீரியல்களில் ஆதிக்கமே அதிகமாக இருக்கும் நிலை ஏற்படும்.

Also Read: டிஆர்பி-யில் தூள் கிளப்பும் சன் டிவி.. டாப் 5லிருந்து துரத்தப்பட்ட விஜய் டிவி சீரியல்கள்