புதன்கிழமை, நவம்பர் 6, 2024

1300 எபிசோடுக்கு மேல் எண்டு கார்டு போடப்பட்ட விஜய் டிவி சீரியல்.. குடும்ப குத்து விளக்கு அண்ணி வெளியிட்ட புகைப்படம்

Vijay Tv Serial: விஜய் டிவியில் எத்தனையோ சீரியல்கள் வந்தாலும், எப்போதுமே பழைய சீரியல்களுக்கு தனி மவுஸ் தான். அந்த வகையில் பல வருடங்களாக ஒளிபரப்பாகி வந்த ஒரு நாடகம் தற்போது முடிவுக்கு வந்துவிட்டது. அதுவும் குடும்ப கதையை மையமாக வைத்து அண்ணன் தம்பிகளின் பாசத்தை கொண்டு வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தற்போது 1300 எபிசோடுகளை தாண்டி சுபம் போடும் நேரம் வந்துவிட்டது.

அதாவது கதிரின் முன் கோபத்தால் தேவையில்லாத பிரச்சனையில் மாட்டிக் கொண்டார். அதாவது மீனாவின் அப்பாவை மிரட்டிய காரணத்திற்காக இவர் தான் கொலை பண்ணிருப்பார் என்று கதிரையும் ஜீவாவையும் போலீஸ் அரெஸ்ட் பண்ணி கூட்டிட்டு போனார்கள்.

இதற்கு அடுத்து பிரசாந்த் தான் எல்லா தவறையும் செய்தார் என்று ஜனார்த்தன் வாக்குமூலம் கொடுத்ததை ஒட்டி, கோர்ட்டில் இருந்து ஜீவா மற்றும் கதிர் நிரபராதி என்று சொல்லி வெளியே விட்டு விடுகிறார்கள். அதன் பின் மூர்த்தி ஒட்டுமொத்த சந்தோசமாக தம்பிகளை அரவணைத்துக் கொண்டு வீட்டிற்கு கூட்டிட்டு வருகிறார்.

Also read: புது குணசேகரன் சொதப்பியதால் தந்திரமாக தூக்கிய எதிர்நீச்சல் டீம்.. தம்பிகளுக்கு கொம்பு சீவிட்டு போன அண்ணன்

இவர்களை பார்த்த சந்தோஷத்தில் தனம் ஆரத்தி எடுத்து உள்ளே வரவேற்கிறார். இதனைத் தொடர்ந்து அண்ணன் தம்பிகள் ஒட்டுமொத்தமாக ஒன்று சேர்ந்து சந்தோஷமாக பேசி வருகிறார்கள். அதே மாதிரி மீனாவின் அப்பாவும் யார் நல்லவர்கள் என்று உண்மையை தெரிந்து கொண்டு திருந்தி மூர்த்தியிடம் மன்னிப்பு கேட்கிறார்.

அடுத்தபடியாக பிரசாந்தின் சித்தி இது வரை ஆணவத்தில் அனைவரையும் மட்டம் தட்டி வந்தார். தற்போது தன் வளர்த்த மகன் இப்படி ஒரு தப்பை செய்து விட்டார் என்று குற்ற உணர்ச்சியில் வருந்துகிறார். இப்படி ஒரு வழியாக அனைவரும் திருந்தியதை ஒட்டி நாடகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க போகிறார்கள்.

Also read: மரணப் படுக்கையில் பாண்டியன் ஸ்டோர்ஸ்க்கு ஏற்பட்ட விடிவு காலம்.. வயித்தெரிச்சலில் சக்காளத்தி

அதாவது கிட்டத்தட்ட 1300 எபிசோடுக்கு மேல் வந்து நிலையில் கதையே இல்லாமல் அரைச்ச மாவையே அரைச்சு உருட்டிகிட்டு வராங்க என்று பல்வேறு கமெண்ட்ஸ்கள் வந்தது. இருந்தாலும் அதையெல்லாம் காதில் வாங்கிக் கொள்ளாமல் எப்படியோ நாடகத்தை இந்த அளவுக்கு கொண்டு வந்து விட்டார்கள். இன்னொரு பக்கம் என்னதான் இருந்தாலும் ஏதோ ஒரு பொழுதுபோக்குக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் நாடகத்தை பார்த்து வந்தோம்.

இனி இதை பார்க்க முடியவில்லை என்ற வருத்தமும் கொஞ்சம் இருக்கிறது என சிலர் புலம்புகிறார்கள். எது எப்படியோ அண்ணன் தம்பிகளின் பாசத்தை வைத்து கூட்டு குடும்பத்தின் மூலம் ஒரு கருத்தை முன்வைத்து வெற்றி பார்த்திருக்கிறார்கள். அந்த வகையில் இந்த நாடகத்தின் மொத்த டீமும் ஒன்று சேர்ந்து சுபம் போடும் புகைப்படத்தை தனம் சமூக வலைதளங்களில் வெளியிட்டிருக்கிறார். அதை பார்க்கும் பொழுது நாடகத்திற்கு கடைசியாக பூசணிக்காயை உடைத்து விட்டார்கள்.

தனம் வெளியிட்ட புகைப்படம்

pandian-stores
pandian-stores

Also read: மீனாவின் வெறுப்பை சம்பாதித்த கதிர்.. நிலைகுலைந்து போன பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்

- Advertisement -spot_img

Trending News