வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

மீனாவின் வெறுப்பை சம்பாதித்த கதிர்.. நிலைகுலைந்து போன பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்

Pandian Stores: விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் தொடர் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இறுதி கட்டத்தை நெருங்கி வரும் இந்த தொடர் பரபரப்பான திருப்பங்களுடன் அரங்கேறி வருகிறது. அந்த வகையில் மீனாவின் தந்தை ஜனார்த்தனன் கத்தி குத்துபட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ஆனால் இந்த கொலை முயற்சி பழி ஜீவா மற்றும் கதிர் மேல் விழுகிறது. ஆனால் உண்மையான குற்றவாளி ஜனார்த்தனின் இளைய மருமகன் தான். அவர் ஜனார்த்தனை கத்தியால் குத்தி விட்டு தானும் சில இடங்களில் கிழித்துக்கொண்டு ஜீவா மற்றும் கதிர் தான் இந்த சம்பவத்தை செய்தார்கள் என்று போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.

Also Read : ரமணா பட பாணியில் இறந்த குணசேகரனுக்கு உயிர் கொடுத்து வரும் எதிர்நீச்சல்.. கதிர், ஞானத்தை விட நல்லவரா?

இந்நிலையில் ஜனார்த்தனன் தீவிர சிகிச்சையில் இருப்பதால் அவரால் உண்மையை சொல்ல முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. கதிர் முன்கோபம் உடையவர் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான். ஆகையால் கண்டிப்பாக தனது அப்பாவை கத்தியால் குத்தி இருப்பார் என மீனா நம்பி விடுகிறார். இதனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தை விட்டு வெளியேறி தனது வீட்டுக்கு வந்து விடுகிறார்.

முல்லை மீனாவை சமாதானப்படுத்துவதற்காக அவரது வீட்டுக்கு செல்கிறார். அப்போது கதிர் இந்த தவறை செய்திருப்பார் என்று நினைக்கிறீர்களா என மீனாவிடம் முல்லை கேட்கிறார். இதனால் ஆத்திரமடைந்த மீனா இனி கதிரின் முகத்தைக் கூட நான் பார்க்க விரும்பவில்லை என கோபமாக கத்துகிறார்.

Also Read : விஜய் டிவி கதாநாயகி ஷோவின் டைட்டில் வின்னர் இவர்தான்.. இழுத்து மூடிட்டு புதுசாக வரும் நிகழ்ச்சி

இதனால் செய்வதறியாமல் நிலைகுலைந்து போய் முல்லை வீட்டுக்கு திரும்பி விடுகிறார். எந்த பிரச்சனை நடந்தாலும் மீனா எப்போதுமே பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் பக்கம் தான் நிற்பார். ஆனால் இந்த முறை தனது தந்தையின் நிலையை பார்த்துவிட்டு கதிர் மற்றும் ஜீவாவுக்கு எதிராக இருக்கிறார்.

இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றால் ஜனார்த்தனன் நலம் பெற்று உண்மையை சொன்னால் மட்டுமே பிரச்சனை சுமூகமாக முடியும். ஆகையால் ஜனார்த்தனன் மீண்டும் பழையபடி பேச ஆரம்பித்த உடன் மீனா தனது தவறை உணர்ந்து கதிர் மற்றும் ஜீவாவிடம் மன்னிப்பு கேட்க இருக்கிறார். இவ்வாறு உணர்ச்சி பூர்வமான கதை களத்துடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் ஒளிபரப்பாக இருக்கிறது.

Also Read : பிக் பாஸில் ஏழரை கூட்ட 7 போட்டியாளர்கள்.. ஆளே கிடைக்காததால் கோமாளியை தூக்கி விஜய் டிவி

- Advertisement -

Trending News