வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

காத்திருந்தவன் பொண்டாட்டிய நேத்து வந்தவன் கொத்திட்டு போனான்.. ஜனனியை நம்பி மோசம் போன ஆதிரை

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலைப் பார்ப்பவர்களுக்கு திக் திக் என்று திகில் நாடகம் பார்ப்பது போல் ஒரு விதமான பரபரப்பு ஏற்படுகிறது. அதிலும் முக்கியமாக இந்த நாடகத்தைப் பார்க்கும்போது BP மாத்திரையை பக்கத்தில் வைத்துக் கொண்டுதான் பார்க்க வேண்டும் போல அப்படித்தான் கதை நகர்ந்து வருகிறது.

அதாவது ஜனனி மற்றும் மற்ற அண்ணிகளும் சேர்ந்து எப்படியாவது அருண் உடன் சேர்த்து வைத்து விடுவார்கள் என்ற நம்பிக்கையில் இருந்த ஆதிரை கடைசியில் மோசம் போய்விட்டார் என்று தான் சொல்லலாம். ஆதிரையைப் பார்க்கும் பொழுது ஒரு பக்கம் பாவமாகத்தான் இருக்கிறது.

Also read: கோபியை உசுப்பேத்தி ரணகளப்படுத்தும் ராதிகா.. பாவம் வலிக்காத மாதிரி எவ்வளவு தான் தாங்குவார்

ஊருக்குள்ள எல்லாரும் சொல்லுவாங்களே காத்திருந்தவன் பொண்டாட்டிய நேத்து வந்தவன் கொத்திட்டு போனான் என்று அது மாதிரி தான் அருண் உடைய நிலைமை ஆகிவிட்டது. ஆனாலும் குணசேகரன் கடைசி நிமிடத்தில் வந்து இவ்வளவு பெரிய பரபரப்பை ஏற்படுத்துவார் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை.

வந்த வேகத்திற்கு மண்டபத்திற்கு கூட்டிட்டு போய் தான் திருமணம் நடத்தி வைப்பார். அதற்குள் ஜீவானந்தம் மற்றும் அருண் மூலம் ஏதாவது திருப்பங்கள் ஏற்பட்டு விடும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் எங்கே விட்டா மறுபடியும் தில்லாலங்கடி வேலையைப் பார்த்து ஓடிப் போய் விடுவார் என்ற நினைப்பில் நடு ரோட்டிலேயே அக்கப்போர் தனம் பண்ணி வலுக்கட்டாயமாக ஆதிரை கழுத்தில் கரிகாலனைத் தாலி கட்ட வைத்து விட்டார்.

Also read: குணசேகரன் உடம்பில் ஊறிப்போன நக்கல் நையாண்டி பேச்சு.. ட்ரெண்டிங் ஆகும் காமெடி வசனங்கள்

இதை பார்க்க ரொம்பவே பாவமாகவும், பரிதாபமாகவும் தான் இருக்கிறது. இன்னொரு பக்கம் ஜனனி, நந்தினி மற்றும் ரேணுகா தலையில் அடித்துக் கொண்டு அழுது கொண்டிருக்கிறார்கள். ஒருவேளை இது கனவாக இருப்பதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. அப்படி இல்லை என்றால் இனி ஆதிரையின் நிலைமை என்னவாக இருக்கும்.

கடைசியில் குணசேகரன் நினைத்ததை சாதித்து விட்டார் என்றே சொல்லலாம். இவரை தோற்கடிக்க வேண்டும் என்று நினைத்த ஜனனி, கடைசியில் தோற்று போய் நின்ற தான் மிச்சம். ஆனாலும் யாரும் எதிர்பார்க்காத ஒரு திருப்பத்தை கொண்டு வந்து பார்ப்பவர்களை கதி கலங்க வைத்து விட்டார். இன்னும் என்னவெல்லாம் நடக்க இருக்கிறதோ என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

Also read: தனத்துக்கு இப்படி ஒரு நோயா?. அதிர்ச்சியில் உறைந்த பாண்டியன் ஸ்டோர்ஸ்

- Advertisement -

Trending News