ஆட்ட நாயகனாக ஜீ தமிழில் ஜொலிக்கும் விஜய் டிவி ஹீரோ.. கமுக்கமாக பதிலடி கொடுக்கும் சன் டிவி

Zee Tamil: எத்தனையோ சேனல்கள் போட்டி போட்டு வந்தாலும் சன் டிவி சீரியலுக்கு ஈடாக வேறு எந்த சேனல்களும் டாப்பில் வருவதற்கு இடமில்லை. அந்த அளவிற்கு எக்கச்சக்கமான சீரியல்களை வைத்து மக்களிடம் ஒரு நிலையான முத்திரையை பதித்து விட்டது. அடுத்தபடியாக விஜய் டிவி ஒரு பக்கம் சீரியல் என்றும் இன்னொரு பக்கம் ரியாலிட்டி ஷோ, நகைச்சுவை போன்ற புதுப்புது நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மக்களிடம் இருந்து வரவேற்பை பெற்றுவிட்டது.

இதனைத் தொடர்ந்து ஜீ தமிழ் எப்படியாவது இந்த வரிசையில் நாமும் இடம் பிடித்து விட வேண்டும் என்று மக்களை கவரக்கூடிய வகையில் புதுப்புது சீரியல்களை வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில் தற்போது பல சீரியல்களை மக்கள் தொடர்ந்து பார்த்து ஆதரவு கொடுத்து வருகிறார்கள். அதில் இதயம், அண்ணா, கார்த்திகை தீபம், நினைத்தேன் வந்தாய், சந்தியா ராகம் போன்ற இந்த சீரியல்கள் அனைத்தும் டிஆர்பி ரேட்டிங்கில் இடம் பிடித்து விட்டது.

ஜீ தமிழில் பட்டைய கிளப்பும் சீரியல்கள்

அந்த வகையில் இதயம் சீரியலில் பாரதி மற்றும் தமிழை உண்மையாக நேசிக்கும் ஆதியின் போராட்டமான கல்யாண வாழ்க்கையில் பல இடைஞ்சல்களை கொடுக்கும் குடும்பத்திற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கதை நகர்ந்து வருகிறது. இதனால் இந்த நடத்திற்கு ஏகப்பட்ட வரவேற்பு கொடுத்து தொடர்ந்து மக்கள் பார்த்துக் கொண்டு வருகிறார்கள்.

அடுத்ததாக செம்பருத்தி நாடகத்தின் மூலம் ஜீ தமிழில் நுழைந்த கார்த்திக் தொடர்ந்து மக்களை கவர்ந்து வருகிறார். தற்போது கார்த்திகை தீபம் என்ற நாடகத்தின் மூலம் மக்களின் பேராதரவு கிடைத்திருக்கிறது. மேலும் அண்ணா சீரியலில் நடிக்கும் மிர்ச்சி செந்தில் விஜய் டிவியில் நடித்து சரவணன் மீனாட்சி என்ற வெற்றி தொடரின் மூலம் ஜீ தமிழில் நுழைந்து ஆட்ட நாயகன் என்று சொல்லும் அளவிற்கு ஜொலித்துக் கொண்டு வருகிறார்.

இவருடன் சேர்ந்து இவரின் மனைவியாக நடிக்கும் பரணி என்கிற நித்யா ராம் எதார்த்தமான நடிப்பு மக்களை கவர்ந்து விட்டது. மேலும் நினைத்தேன் வந்தாய் என்ற சீரியல் மூலம் பிக் பாஸ் கணேஷ் வெங்கட்ராமுக்கு புது சான்ஸ் கிடைத்திருக்கிறது என்று சொல்லலாம். அதனால் கிடைத்த இந்த சான்சை சரியாக பயன்படுத்தும் விதமாக மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறார்.

இதனைத் தொடர்ந்து சந்தியா ராகம் என்ற சீரியல் மக்களின் ஃபேவரிட் நாடகமாக இடம் பிடித்து ஒரு நாள் கூட மிஸ் பண்ணாமல் பார்க்கும்படி மக்களுடன் ஒன்றிபோய்விட்டது. இப்படி சன் டிவி மற்றும் விஜய் டிவிக்கு இடையே புகுந்து விடலாம் என்று ஜீ தமிழ் வித்தியாசமான கதைகளைக் கொண்டு புத்தம் புது நாடகங்களை களம் இறக்கி வெற்றி பெற்று வருகிறது.

இதையெல்லாம் கமுக்கமாக இருந்து வேடிக்கை பார்க்கும் சன் டிவி சேனல் மட்டும் சும்மா இருந்திடுமா என்ன? அதனால் அவங்க பங்குக்கும் புத்தம்புது நாடகங்களை இறக்கிக் கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் புதிதாக வந்திருக்கும் மருமகள், லட்சுமி, அனாமிகா மற்றும் வர இருக்கும் ஆடுகளம் போன்ற நாடகங்களை வைத்து யாருமே பக்கத்தில் வர முடியாத அளவிற்கு உயரத்திற்கு போய்க்கொண்டே பதிலடி கொடுத்து வருகிறது.

சன் டிவி மற்றும் விஜய் டிவிக்கு நடக்கும் யுத்தம்

Next Story

- Advertisement -