திங்கட்கிழமை, மார்ச் 17, 2025

ரெண்டு சீரியலுக்கு எண்டு கார்டு போட்ட விஜய் டிவி.. அடுத்த பாயாசம் பாக்கியலட்சுமி தான்

Vijay TV has put an end card for two serials: பொதுவாக விஜய் டிவி என்றாலே மக்களை என்டர்டைன்மென்ட் பண்ணுவதில் அதிக மெனக்கெடு செய்வார்கள். அந்த வகையில் புதுப்புது நிகழ்ச்சிகள் மற்றும் ரியாலிட்டி ஷோக்கள் போன்ற விஷயங்களை தொடர்ந்து நடத்தி வருகிறார்கள். இதனை தொடர்ந்து பல சீரியல்களும் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த நிலையில் சில முக்கியமான சீரியல்கள் தற்போது முடிவுக்கு வர இருக்கிறது. அதற்கு பதிலாக புதுப்புது சீரியல்களை களம் இறக்கப் போகிறார்கள். தற்போது எத்தனையோ சேனல்கள் இருந்தாலும் சன் டிவி மற்றும் விஜய் டிவி தான் போட்டி போட்டுக் கொண்டு வருகிறார்கள்.

அந்த வகையில் சன் டிவிக்கு டஃப் கொடுக்கும் வகையில் வீட்டுக்கு வீடு வாசப்படி புத்தம் புதிதாக மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பாக போகிறது. அதற்கு பதிலாக கிழக்கு வாசல் சீரியலுக்கு எண்டு கார்டு போட்டு விட்டார்கள். இதனைத் தொடர்ந்து தற்போது அவசர அவசரமாக கிளைமாக்ஸை கொண்டு வந்து தமிழும் சரஸ்வதியும் என்ற சீரியலையும் முடிக்கப் போகிறார்கள்.

பாக்கியலட்சுமி சீரியலுக்கு பூசணிக்காய் உடைக்கும் நேரம் வந்தாச்சு

இதுவரை கெட்டவனாக இருந்து வந்த அர்ஜுன், தற்போது குழந்தை மனைவி என்று கூட பார்க்காமல் பழிவாங்கும் முயற்சியில் சைக்கோவாக மாறிவிட்டார். ஆனால் இவரை இப்படியே விட்டால் கொடூரமாக மாறிவிடுவான் என்ற நோக்கத்தில் அர்ஜுனின் அம்மா சாப்பாட்டில் விஷம் வைத்து கொடுக்கப் போகிறார்.

கடைசியில் அர்ஜுனை தமிழ் தான் காப்பாற்றப் போகிறார். இப்படி பரபரப்பான காட்சிகளுடன் இந்த வாரத்துடன் இந்த நாடகம் முடியப்போகிறது. இந்த வாரத்திலேயே இரண்டு நாடகம் முடிவுக்கு வந்துவிட்டது. இன்னும் அடுத்து மிச்சம் இருப்பது பாக்கியலட்சுமி சீரியல் தான்.

கதையே இல்லாமல் பல மாதங்களாக அரைச்ச மாவையே அரைச்சு மட்டமாக உருட்டி வருகிறார்கள். அந்த வகையில் இன்னும் ஓரிரு நாட்களில் இந்த நாடகத்திற்கும் பூசணிக்காய் உடைக்க போகிறார்கள். இதற்கு பதிலாக புத்தம் புது சீரியலை இறக்கி டிஆர்பி ரேட்டிங்கில் இடம் பிடிக்க விஜய் டிவி சேனல் ஸ்கெட்ச் போட்டு வருகிறார்கள்.

Advertisement Amazon Prime Banner

Trending News