30 வயது வித்தியாசம், விஜய்க்கு ஜோடியாகும் விஜய் சேதுபதியின் மகள்.. இளசாக பிடிச்சுட்டு வந்த வெங்கட் பிரபு

விஜய் பற்றிய செய்திகள் என்றாலே அது நிச்சயம் பரபரப்பை ஏற்படுத்திவிடும். அப்படித்தான் தற்போது தளபதி 68 படத்தின் அதிரி புதிரியான அறிவிப்பு திடீரென்று வந்தது. ஏற்கனவே இது குறித்து அரசல் புரசலாக செய்திகள் வெளிவந்த போதிலும் இந்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துவிட்டது என்று தான் சொல்ல வேண்டும்.

அதைத்தொடர்ந்து படம் தொடர்பான பல செய்திகளும் மீடியாவை கலக்கிக் கொண்டிருக்கிறது. மேலும் தற்போது வெங்கட் பிரபு, விஜய்யுடன் கூட்டணி அமைத்திருப்பது பெரும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது ஒரு புறம் இருக்க இப்படத்தில் விஜய்க்கு யார் ஜோடியாக நடிப்பார் என்ற ஆர்வமும் ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் கடந்த சில படங்களில் இவருடன் ஜோடி சேர்வதற்கு பல முன்னணி நடிகைகளும் நீ நான் என போட்டி போட்டு வந்தனர்.

Also read: அந்த மாவட்டங்களை குறி வைத்திருக்கும் லியோ.. பிறந்த நாளில் மதுரையில் நடக்கப் போகும் சம்பவம்

அந்த வரிசையில் இப்போதும் நம்பர் ஒன் ஹீரோயின் தான் விஜய்க்கு ஜோடியாக நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதிலும் ஏற்கனவே அவருக்கு ஜோடியாக நடித்த நடிகைக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற ரீதியில் பேச்சுக்களும் கிளம்பியது. ஆனால் வெங்கட் பிரபு இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக இளசான ஒரு நடிகையை பிடித்திருக்கிறார். அதுதான் இப்போது கோலிவுட்டின் ஹாட் டாப்பிக்காக இருக்கிறது.

அந்த வகையில் 19 வயதே ஆன விஜய் சேதுபதியின் மகள்தான் இப்படத்தில் விஜய்யுடன் ஜோடி சேர இருக்கிறார். என்னது விஜய் சேதுபதியின் மகளா, அது எப்படி முடியும் என்று உங்களுக்கு தோன்றலாம். ஆனால் இவர் ரியல் மகள் கிடையாது, ரீல் மகள். அதாவது விஜய் சேதுபதி நடித்த உப்பெனா என்ற தெலுங்கு படத்தில் அவருக்கு மகளாக நடித்தவர் தான் நடிகை கீர்த்தி செட்டி.

Also read: படத்தின் பட்ஜெட்டை சம்பளமாக கேட்டா நியாயமா.? கும்பிடு போட்டு தளபதி 68க்கு ஏஜிஎஸ் போட்ட கணக்கு

மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற இப்படத்தை தொடர்ந்து அவர் இப்போது தெலுங்கில் பிரபல நடிகையாக இருக்கிறார். அதைத்தொடர்ந்து வணங்கான் படத்திலும் இவர் நடிக்க கமிட் ஆகி ஷூட்டிங்கிலும் கலந்து கொண்டார். ஆனால் சில பிரச்சனைகளால் தற்போது வேறு ஹீரோயின் படத்தில் நடித்து வருகிறார். இதனால் இவருடைய கோலிவுட் கனவு நிறைவேறாமலே இருந்தது. ஆனால் இப்போது மாஸ் ஹீரோவான விஜய்க்கு ஜோடி போடுவதன் மூலம் அந்த கனவு நனவாகி விட்டது.

இதற்கு வெங்கட் பிரபுவும் ஒரு முக்கிய காரணம் என்பதை மறுக்க முடியாது. ஏனென்றால் சமீபத்தில் அவருடைய இயக்கத்தில் வெளியான கஸ்டடி படத்தில் நடித்திருந்த கீர்த்தி அப்போதே இந்த வாய்ப்பை கேட்டு வாங்கி விட்டாராம். அந்த வகையில் 19 வயதே ஆன இவர் 30 வயசு வித்தியாசம் உள்ள விஜய்க்கு ஜோடியாக நடிக்க இருப்பது பெரும் ஆச்சரியத்தை கிளப்பி இருக்கிறது. மேலும் இந்த ஜோடியின் கெமிஸ்ட்ரி எப்படி இருக்கும் என்பதை காணவும் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Also read: மாநாடு பட வெற்றிக்கு வெங்கட் பிரபுவை விட இவர் தான் காரணமாம்.. தளபதி-68 தலை தப்புமா!

- Advertisement -spot_img

Trending News