ஹீரோ இமேஜுக்காக 5 கோடி சம்பளத்தை கம்மியாக்கிய விஜய் சேதுபதி.. மகாராஜா கையில் இருக்கும் 10 படங்கள்

Vijay Sethupathi Line Up Movies: இருக்கிறதை விட்டு பறக்குறதுக்கு ஆசைப்பட்டால் உள்ளதும் போய்விடும் என்று ஒரு சொலவடை உண்டு. அது போல தான் நடிகர் விஜய் சேதுபதி ஆரம்பத்தில் வாய்ப்புக்காக ஏங்கிக் கொண்டிருக்கும் பொழுது கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி ஹீரோவாக முன்னுக்கு வந்தார். அப்பொழுது கையில் 10 படங்களை வைத்துக்கொண்டு அசால்டாக நடித்து எக்கச்சக்கமான படங்களை ரிலீஸ் பண்ணினார்.

ஆனால் ஆசை யாரை விட்டது என்று சொல்வதற்கு ஏற்ப ஹீரோவாக சம்பாதித்தது போதாது என்று வில்லனாகவும் நடிக்க ஆசைப்பட்டார். ஏனென்றால் வில்லனாக நடிப்பதற்கு ஹீரோவுக்கு வாங்கிய சம்பளத்தை விட அதிகமாக கிடைத்தது. இதனால் தொடர்ந்து ரெண்டு மூணு படங்களில் வில்லனாக நடித்து வந்தார். ஆனால் அதன் பின்பு விஜய் சேதுபதி வில்லன் கேரக்டருக்கு தான் சூட்டாகுவார் என்ற பெயர் வந்து விட்டது.

விட்ட இடத்தை பிடித்த விஜய் சேதுபதி

இதனால் பல இயக்குனர்களும் விஜய் சேதுபதியை தேடி போனது வில்லன் வாய்ப்புக்காக. இதனால் ஒரு கட்டத்தில் விஜய் சேதுபதி இனி நாம் ஹீரோவாக முடியாதோ என்று பயம் வந்து விட்டது. அதனால் விட்ட இடத்தை பிடிக்க வேண்டும் என்று மறுபடியும் முயற்சி எடுக்க ஆரம்பித்தார். ஆனால் அப்படி இவர் நடித்த மேரி கிறிஸ்மஸ் படம் வெற்றி பெறாமல் போய்விட்டது.

இதனால் மறுபடியும் ஒரு வெற்றி படத்தை கொடுத்து விட வேண்டும் என்று மஹாராஜா படத்தில் 20 கோடி சம்பளத்தை மட்டுமே பெற்று நடித்துள்ளார். அதே மாதிரி இந்த படம் எதிர்பார்க்காத அளவிற்கு வெற்றி பெற்று ஒரு நல்ல இமேஜை மறுபடியும் பெற்றுவிட்டார். இதனை தக்க வைத்துக் கொள்வதற்காக விஜய் சேதுபதி இதுவரை வாங்கிக் கொண்டிருந்த சம்பளங்களை விட கம்மியாக போதும் என்று 5 கோடி சம்பளத்தை குறைத்துக் கொண்டார்.

அந்த வகையில் இனி நடிக்கப் போகும் படங்களுக்கு 10 முதல் 15 கோடி சம்பளம் போதும் என்று கூறிவிட்டார். இவர் இப்படி கூறியதிலிருந்து இவரை தேடி தயாரிப்பாளர்கள் வாய்ப்புகளை கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள். அதனால் இப்போதைக்கு மூன்று படங்களில் கமிட் ஆகி நடிக்க ஆரம்பித்து விட்டார். சத்திய சோதி பிலிம்ஸ் தயாரிப்பில் ஒரு படமும், மிஸ்கின் இயக்கத்தில் கலைப்புலி எஸ் தானு தயாரிப்பில் ட்ரெயின் என்ற படத்திலும் கமிட் ஆகியுள்ளார்.

இதற்கிடையில் பிசாசு 2 மற்றும் விடுதலை படத்தின் இரண்டாம் பாகமும் போய்க் கொண்டிருக்கிறது. மேலும் மகாராஜா படம் இப்பொழுது வெற்றி பெற்ற நிலையில் தொடர் வாய்ப்புகளை பெற்று வருகிறார். அந்த வகையில் பழைய ஃபார்முலா படி விஜய் சேதுபதி இனி வருஷத்துக்கு பத்து படங்களில் நடித்து ரிலீஸ் பண்ணுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மகாராஜா படத்தின் மூலம் விஜய் சேதுபதிக்கு அடித்த ஜாக்பாட்

Next Story

- Advertisement -