லாஜிக்கே இல்லாமல் கோபத்தை கொட்டி தீர்க்கும் விஜய் சேதுபதி.. பேசியே எரிச்சலை கிளப்பும் மக்கள் செல்வன்

Loose Talk: விஜய் சேதுபதியின் கடைசி படம் மகாராஜா. இவருக்கு இந்தப் படம் ஐம்பதாவது படமாகவும் சூப்பர் ஹிட்டாகவும் அமைந்தது. சமீபகாலமாக இவருக்கு படம் ஓடாததால் பல பேருடைய பேச்சுக்கள் இவரை பெரிய மன வருத்தத்திற்கு ஆளாக்கியது.

கடைசியாக இவருக்கு ஹிட்டான படம் எது என்றே தெரியவில்லை. இவர் ஹீரோவ கடைசியாக நடித்து எந்த படம் ஓடியது என்பதை கூட மக்கள் மறந்துவிட்டனர். விக்ரம், மாஸ்டர் போன்ற படங்கள் இவர் நடித்து ஹிட்டானாலும் , அந்த பெருமை இவருக்கு நேரடியாக சேரவில்லை.

இப்பொழுது இவரின் ஐம்பதாவது படம் மகாராஜா சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டும் 37 கோடிகள் வசூல் சாதனை செய்துள்ளது. சமீபத்தில் விஜய் சேதுபதி கொடுக்கும் பேட்டிகள் மற்றும் மேடைப்பேச்சு அனைத்திலும் தன்னுடைய ஆழ்மனது கோபத்தை கொட்டி தீர்த்து வருகிறார்.

பேசியே எரிச்சலை கிளப்பும் மக்கள் செல்வன்

என் சினிமா கேரியர் கிளோஸ். என் படங்கள் எதுவுமே நல்லா இல்லை. இனிமேல் நான் நடித்தால் எந்த படம் ஓடாது என பேசுகிறார்கள் என்று விஜய் சேதுபதி பேசும்மேடையில் தான் இப்பொழுது ஜெயித்து விட்டேன் என்பதைப் போல் புலம்பித் தள்ளுகிறார். இதே போல் நிறைய தேவையற்ற விஷயங்களை பேசி ரசிகர்களை எரிச்சலடைய செய்கிறார்.

சினிமாவில் ஒருவர் ஜெயித்தால் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவார்கள். தோற்று விட்டால் கண்டு கொள்ள மாட்டார்கள் இந்த அடிப்படை லாஜிக்கே தெரியாமல் விஜய் சேதுபதி இப்படி பேசுவது ஆச்சரியமாக இருக்கிறது. எப்பொழுதும் பிராக்டிகலா பேசும் விஜய் சேதுபதி தற்சமயம் இப்படி புலம்பி வருகிறார்.

Next Story

- Advertisement -