50 வது படத்தில் விட்ட இடத்தை பிடித்த விஜய் சேதுபதி.. கருடனைக விட சிம்மாசனத்தில் ஜொலித்த மகாராஜா

Maharaja Movie collection Report: குரங்கு பொம்மை படத்தை எடுத்த இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி 50வது படத்தில் கமிட் ஆகி நடித்து கடந்த வாரம் வெள்ளிக்கிழமை மகாராஜா படம் அனைத்து திரையரங்களிலும் வெளிவந்தது. பொதுவாக விஜய் சேதுபதிக்கு ஒரு பாவப்பட்ட எதார்த்தமான காட்சி என்றால் நடிப்பது அல்வா சாப்பிடுற மாதிரி தான் இயல்பாக நடித்து விடுவார்.

அந்த மாதிரி தான் மகாராஜா படத்தில் விஜய் சேதுபதியின் நடிப்பு அனைவரையும் கவர்ந்ததோடு மட்டுமில்லாமல் கதையும் மக்களுக்கு பிடித்து விட்டது. அதனால் படத்திற்கு ஏகபோக வரவேற்பு கிடைத்து வெற்றி நடை போட்டு வருகிறது. அந்த வகையில் வெளியாகி கிட்டத்தட்ட ஒரு வாரம் ஆகிய நிலையில் தற்போது வரை 50 கோடி வசூலை பெற்றிருக்கிறது.

நினைச்சதை சாதித்து காட்டிய விஜய் சேதுபதி

இது படத்திற்கு மட்டும் கிடைத்த வரவேற்பு இல்லை, விஜய் சேதுபதி விட்ட இடத்தை பிடிக்க வேண்டும் என்று போராடியவருக்கு கிடைக்கப்பட்ட சிம்மாசனம் என்றே சொல்லலாம். ஏனென்றால் சமீப காலமாக வில்லனாக நடித்து வந்த இவருக்கு தொடர்ந்து ஹீரோ இமேஜ் தக்க வைத்துக் கொள்ள முடியாமல் போய்விட்டது. இதனால் பதட்டமான விஜய் சேதுபதி எங்கே இனி ஹீரோவாக ஜொலிக்க முடியாதோ என்ற பயம் வந்துவிட்டது.

அதனால் உடனடியாக மக்கள் மனதில் இருக்கும் வில்லன் இமேஜே அளிக்க வேண்டும் என்று மகாராஜா படத்தில் நடித்து அதற்கான வெற்றியை பெற்று விட்டார். அந்த வகையில் போராடியதற்கு பலனாக விஜய் சேதுபதி விட்ட இடத்தை பிடித்து ஹீரோ இமேஜை தக்க வைத்துக் கொண்டார். இதனை தொடர்ந்து இனி விஜய் சேதுபதி போடும் ஆட்டம் வெற்றியை தான் கொடுக்கப் போகிறது.

இன்னொரு பக்கம் மகாராஜா படம் வருவதற்கு முன் வெளிவந்த கருடன் படம் கிட்டத்தட்ட இரண்டு வாரம் ஆகிய நிலையில் இப்பொழுது தான் 50 கோடி வசூலை அடைந்திருக்கிறது. இதனால் சூரி மற்றும் சசிகுமார் நடித்த கருடனை விட விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த மகாராஜா படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றுவிட்டது. மேலும் இன்று பெருசாக சொல்லும் படி புது படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகவில்லை.

ஆனால் விதார்த் நடிப்பில் உருவாகியுள்ள லாந்தர் படம் இன்று வெளி வந்திருக்கிறது. அதனால் இந்த வாரமும் ஒன் மேன் ஆர்மியாக நின்னு கிட்டத்தட்ட 100 கோடி வசூலை தொட்டுவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெற்றி பெற்று வரும் விஜய் சேதுபதியின் மகாராஜா

Next Story

- Advertisement -