ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

வயித்துல அடிச்சு பிடுங்கிய 2 கோடியை வீதியில் இறைத்த லியோ டீம்.. எனக்கென்னன்னு ஜாலியா இருக்கும் தளபதி

Actor Vijay – Leo: நேற்றிலிருந்து தமிழ்நாடு முழுக்க திரும்பும் பக்கம் எல்லாம் லியோ படத்தின் ஆடியோ லான்ச் பற்றிய பேச்சு தான். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டது சமூக வலைத்தளங்களில் பெரிய போராட்டமாகவே மாறிவிட்டது. தயாரிப்பு தரப்பிலிருந்து சரியான காரணம் சொல்லப்பட்டாலும், விஜய் ரசிகர்கள் ஒரு பக்கம், பிரபலங்கள் ஒரு பக்கம் என தங்களுடைய யூகங்களை கருத்துகளாக சொல்லி வருகிறார்கள்.

இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டதை இப்படி பூதாகர விஷயமாக பேசிக் கொண்டிருக்கும் சமயத்தில், லியோ டீம் செய்த இப்படி ஒரு விஷயம் வெளியில் வராமல், யாராலும் வெளிக் கொண்டு வரப்படாமலும் இருப்பதுதான் பெரிய ஆச்சரியத்தை கொடுக்கிறது. ஒருவேளை தெரிந்து கொண்டே, கண்டு கொள்ளாமல் இருக்கிறார்களா என்ற சந்தேகத்தையும் உண்டு பண்ணுகிறது.

Also Read:ஆடியோ லான்சை கேன்சல் பண்ணிட்டோமே தமிழ்நாட்ட குடுத்துருங்க.. உதயநிதிக்கு அஜித் கொடுத்த பதிலடி மீம்ஸ்

வழக்கமான விஜய் படம் போன்று இந்த லியோ படத்திலும் பிரம்மாண்டமான பாட்டு ஒன்று இருப்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். இதில் கிட்டத்தட்ட 1200 நடன கலைஞர்கள் ஆடி இருக்கிறார்கள். கடந்த சில வருடங்களாகவே விஜய் படங்களில் இது போன்ற ஒரு ஹை பட்ஜெட் பாட்டு இடம்பெறுகிறது. அதைத்தான் லியோ பட குழுவும் தொடர்ந்து இதில் செய்து இருக்கிறார்கள்.

இதில், தற்போது என்ன பிரச்சனை என்றால் இந்தப் பாட்டுக்கு ஆடிய 1200 பேருக்கும் இன்னமும் சம்பளம் கொடுக்கப்படவில்லையாம். இவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய சம்பளத்தை கணக்கு பார்த்தால் இரண்டு கோடி ரூபாய் வருகிறதாம். படப்பிடிப்பு முடிந்து பல மாதங்கள் ஆகியும் சம்பளத்தை கொடுத்து செட்டில் பண்ணாமல் இருக்கிறார்கள் பட குழு.

Also Read:லியோ ஆடியோ லான்ச் டிக்கெட் வித்து பிழைக்கணும்னு அவசியம் இல்ல.. பிஸ்மிக்கு விஜய் தரப்பில் கொடுத்த பதிலடி

லியோ ஆடியோ லான்ச்சுக்கு மட்டும் கிட்டத்தட்ட இரண்டிலிருந்து மூன்று கோடி செலவு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் கடைசி நேரத்தில் இந்த விழா ரத்து செய்யப்பட்டு விட்டது. இதனால் அவர்கள் செலவு செய்த இந்த காசு மொத்தத்தில் வீணாய் போய்விட்டது. இதற்கு அந்த நடன கலைஞர்களுக்கு கொடுக்க வேண்டிய சம்பளத்தை சரியாக கொடுத்திருக்கலாம்.

தன்னுடைய படத்தில் இப்படி சம்பள பாக்கி இருப்பது விஜய்க்கு தெரியுமா என்ற சந்தேகம் எல்லோருக்கும் இருக்கிறது. இது போன்ற முன்னணி ஹீரோக்கள் படத்தில் நடித்தோமா, வேலையை முடித்தோமா என்று இல்லாமல் படம் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு ஏதாவது பிரச்சனையா, இது போன்ற சம்பள பாக்கியம் சிக்கிக் கொண்டிருக்கிறார்களா எனவும் பார்த்து அவர்களுடைய குறையை தீர்த்தால் நன்றாக இருக்கும்.

Also Read:லோகேஷ், விஜய் மோதலால் வெடிக்கும் சர்ச்சை.. இமேஜை தொட்டு பார்த்ததால் வந்த வினை

- Advertisement -

Trending News