ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 10, 2024

விஜய் சேதுபதி சீசன் முடிந்தது.. நிற்க நேரமில்லாமல் பிசியான வாரிசு நடிகர்

Actor Vijay Sethupathi: தான் ஏற்கும் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து விஜய் சேதுபதி நடிக்கும் படங்கள் மாபெரும் வெற்றியை கண்டு வருகிறது. மேலும் அடுத்தடுத்த படங்களில் பிசியாகவே இருந்த, இவரையே மிஞ்சிய வாரிசு நடிகர் பற்றிய தகவலை இங்கு காண்போம்.

சமீப காலமாய் இவர் ஏற்கும் வில்லன் கதாபாத்திரம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. விக்ரம் படத்திற்கு பிறகு தற்போது பாலிவுட்டில் பக்கம் திரும்பி உள்ள விஜய் சேதுபதி ஜவான் படத்தில் ஷாருக்கானுக்கு வில்லனாய் களமிறங்கி உள்ளார்.

Also Read: 72 வயசு எல்லாம் என்ன, 86 வயசிலும் நடித்த அரக்கன்.. சூப்பர் ஸ்டாரை மீண்டும் வம்பிழுக்கும் ப்ளூ சட்டை

அவ்வாறு தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பிசியாக இருந்த இவர், பாலிவுட் பக்கம் சென்றதால் தமிழ் சினிமாவில் வாய்ப்பு கொஞ்சம் டல்லாக தான் இருந்து வருகிறது. இந்நிலையில் இவரையே தூக்கி சாப்பிடும் அளவிற்கு தற்போது வாரிசு நடிகர் ஒருவர் களமிறங்கியுள்ளார்.

ஒவ்வொரு நாளும் இரண்டு படங்களில் நேரம் ஒதுக்கி நடித்து வருகிறார் கார்த்தி. சமீப காலமாக சர்தார், பொன்னின் செல்வன் படத்திற்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து, தன் அடுத்தக்கட்ட படங்களில் ஆர்வம் காட்டி வருகிறார். அதுமட்டுமில்லாமல் இந்த வருடத்தில் இவரின் ஏகப்பட்ட படங்கள் ரிலீஸ் ஆகும் என கூறப்படுகிறது.

Also Read: டிஆர்பி இல்லாததால் ஊத்தி மூடும் விஜய் டிவியின் நிகழ்ச்சி.. பட்ட அசிங்கம் எல்லாம் போதும்

அதை முன்னிட்டு தற்பொழுது நிற்க கூட நேரமில்லாமல் பிசியாக படப்பிடிப்பை மேற்கொண்டு வருகிறார் கார்த்தி. இதுபோன்று பிசியாக இருந்த விஜய் சேதுபதியின் இடத்தை தற்போது இவர் ஓவர் டேக் செய்துள்ளார். அவ்வாறு கார்த்தியின் 25 ஆவது படம் தான் ஜப்பான்.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்று கொண்டிருக்கும் போதே, தன் 26 ஆவது படம் நலன் குமாரசாமி உடன் கை கோக்கின்றார். அதைத் தொடர்ந்து பிரேம்குமார் மேற்கொள்ளும் இவரின் 27ஆவது படம் நவம்பர் மாதம் தொடங்கும் எனவும் அறிவிப்பு வந்துள்ளது. இதைப் பார்க்கையில், அடுத்தடுத்த படங்களில் வெற்றிக்கொடுத்து கல்லா கட்ட தயாராக இருக்கிறார் கார்த்தி என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: தவளை போல் தன் வாயால் கெட்ட தனுஷ் பட நடிகை.. பாலிவுட்டில் துரத்தப்பட்டதால் இங்கு தஞ்சமடைந்த ஹீரோயின்

- Advertisement -spot_img

Trending News