புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

டிஆர்பி இல்லாததால் ஊத்தி மூடும் விஜய் டிவியின் நிகழ்ச்சி.. பட்ட அசிங்கம் எல்லாம் போதும்

Vijay TV: விஜய் டிவியின் நிகழ்ச்சி ஒன்றை இந்த சீசனோடு முடித்து விட முடிவெடுத்து இருக்கிறார்கள். பொதுவாக இதுபோன்று தொடங்கப்படும் நிகழ்ச்சிகள் ஒரு சின்ன இடைவெளிக்கு பிறகு மீண்டும் அடுத்த சீசன் என்ற பெயரில் ஆரம்பிக்கப்படும். ஆனால் இந்த நிகழ்ச்சியை மொத்தமாக நிறுத்த இருக்கிறார்கள். ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இந்த நிகழ்ச்சிக்கு இந்த சீசனோடு எண்டு கார்டு போடப்படுகிறது.

விஜய் டிவியை பொறுத்த வரைக்கும் ஒரு நபர் அல்லது ஒரு நிகழ்ச்சி மிகப்பெரிய அளவில் ரசிகர்களிடம் ரீச் ஆகிவிட்டது என்றால், அதே கண்டன்ட்டை மீண்டும், மீண்டும் உபயோகித்து மக்களை வெறுக்க வைத்து விடுவார்கள். அப்படி ஒரு காலகட்டத்தில் ரசிகர்கள் இடையே மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்ற இந்த நிகழ்ச்சியையும் அரைத்த மாவையே அரைக்கிறோம் என்ற பெயரில் ரசிகர்களாலேயே வெறுக்கும் அளவுக்கு செய்து விட்டது அந்த சேனல்.

Also Read:விஜய் டிவி 8 சீரியல் நடிகைகளின் சம்பளத்தை கேட்டா தல சுத்துது.. முதலிடத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் மருமகள்

முதல் இரண்டு சீசன்களில் ஒட்டுமொத்த சின்னத்திரை நேயர்களையும் தன்வசம் கட்டி போட்டு வைத்திருந்த குக் வித் கோமாளி தான் இந்த சீசனோடு முடிக்கப்படுகிறது. இந்த சமையல் நிகழ்ச்சியை பொருத்தவரைக்கும் போட்டி என்பதை தாண்டி மக்கள் ரசிக்கும் விதமாகவும், வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் விதமாகவும் இருந்ததால் இல்லத்தரசிகள் மட்டுமல்லாமல் குழந்தைகள், ஆண்கள் என அனைவருமே விரும்பி பார்க்க ஆரம்பித்தனர்.

சாமானிய மக்கள் மட்டுமல்லாமல் சினிமா பிரபலங்கள் கூட இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்களாக இருந்தனர். புகழ், பாலா, சிவாங்கி, மணிமேகலை காம்போவில் ஒவ்வொரு எபிசோடும் டிஆர்பியில் உச்சத்தை தொட்டது. ஆனால் அடுத்தடுத்த சீசனங்களில் மக்கள் இதைத்தான் விரும்பி பார்ப்பார்கள் என தெரிந்து கொண்டு வேண்டுமென்றே அது போன்ற விஷயங்களை திணித்ததால், அவர்கள் செய்யும் காமெடி கூட செயற்கையாகவே தெரிந்தது.

Also Read:சிவாங்கியை ஆசை காட்டி மோசம் செய்த விஜய் டிவி.. குக் வித் கோமாளி சீசன் 4 டைட்டில் வின்னர் இவர்தான்

இதனாலேயே மூன்றாவது சீசன் கொஞ்சம் டல் அடிக்க ஆரம்பித்தது. நான்காவது சீசனில் விட்ட டிஆர்பியை பிடித்து விட வேண்டும் என்று விஜய் டிவி எவ்வளவோ முயற்சிகள் செய்தது. ஆனால் இந்த சீசன் மக்களுக்கு வெறுப்பை தான் உண்டாக்கியது. கடைசி மூன்று சீசன் வரைக்கும் சமையல் என்றால் என்னவென்றே தெரியாமல் இருந்த சிவாங்கி பெஸ்ட் குக் என பல எபிசோடுகளில் பாராட்டப்பட்டது, திடீரென மணிமேகலை தொகுப்பாளர் ஆனது என மொத்தமுமே எரிச்சல் ஊட்டும் விதமாக இருந்தது.

முந்தைய சீசன்களில் மக்கள் விரும்பி பார்த்த புகழின் காமெடி கூட இந்த முறை சலிப்பு தட்டவைத்தது என்று தான் சொல்ல வேண்டும். ஒரு கட்டத்தில் இந்த நிகழ்ச்சியை கண்டுகொள்ள ஆளில்லாமல் போனது தான் உண்மை. இதனால் இந்த நான்காவது சீசனோடு குக் வித் கோமாளியை முடித்துக் கொள்ள விஜய் டிவி திட்டமிட்டு இருக்கிறது. மேலும் கிச்சன் சூப்பர் ஸ்டார் என்னும் சமையல் போட்டி நிகழ்ச்சியை மீண்டும் தொடங்குவதற்கு வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.

Also Read:குடும்பப் பிரச்சினையை வைத்து குளிர் காய நினைக்கும் விஜய் டிவி.. பிக் பாஸை நாரடிக்கப் போகும் 3 சர்ச்சையான ஜோடிகள்

- Advertisement -

Trending News