தவளை போல் தன் வாயால் கெட்ட தனுஷ் பட நடிகை.. பாலிவுட்டில் துரத்தப்பட்டதால் இங்கு தஞ்சமடைந்த ஹீரோயின்

Actor Dhanush: தனுஷ் பட நடிகை ஒருவர் தமிழில் டாப் நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்த நிலையில் பாலிவுட் பக்கம் சென்று விட்டார். அங்க முன்னணி நடிகையாகக வலம் வந்து கொண்டிருந்த நிலையில் தவளை தன் வாயால் கெடும் என்ற பழமொழிக்கு ஏற்ப சில விஷயங்களை பேசி சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தார்.

இதனால் பாலிவுட்டில் வாய்ப்பு இழந்த நிலையில் மீண்டும் சினிமாவில் நடிக்க வந்திருக்கிறார். அதுவும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கிறாராம். இவரால் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

Also Read : அதிர்ஷ்டம் இல்லாத விஜய், தனுஷ்.. துணிந்து கையில் எடுக்கும் சூர்யா, ஒரேடியா காலவாரிடாம பாஸ்!

அதாவது தமிழில் தனுஷின் ஆடுகளம் படத்தின் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை டாப்ஸி. வெண்மையான நிறமுடைய இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. லாரன்ஸ் உடன் இணைந்து காஞ்சனா படத்தில் டாப்ஸி நடித்திருந்தார். அதன் பிறகு பாலிவுட் பக்கம் சென்று விட்டார்.

அங்கு பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதமாக உமன் சென்டரிக்கு படங்களில் நடித்து வந்தார். இப்படி பாலிவுட்டில் கொடி கட்டி பறந்து வந்த இவர் தன் வாயாலயே சூனியம் வைத்துக் கொண்டார். அதாவது பாலிவுட்ல அரசியல் சம்பந்தப்பட்ட விஷயங்களை பேசி கேரியரை கெடுத்துக் கொண்டார்.

Also Read : அசுர வேகத்தில் தனுஷ் வளர காரணமாக இருந்த 5 வெற்றி படங்கள்.. சவுக்கடி கொடுத்த பொல்லாதவன்

வந்தாரை வாழவைக்கும் தமிழ் சினிமா என்பது போல மீண்டும் டாப்சி தமிழ் பக்கம் வந்து விட்டார். அதன்படி பெண்களை மையப்படுத்தி எடுக்கப்படும் இரண்டு மூன்று படங்களில் டாப்ஸி கதாநாயகியாக நடித்த வருகிறாராம். இது தவிர பேஷன் ஸ்டுடியோ தயாரிக்கும் ஒரு படத்திலும் டாப்ஸி ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

சயின்ஸ் பிக்சன் படமாக உருவாகும் இந்த படத்தில் டாப்ஸி ஏலியனாக நடிக்கிறாராம். இவ்வாறு தமிழ் சினிமாவில் தனது செகண்ட் இன்னிங்ஸை டாப்ஸி தொடங்கி இருக்கிறார். இதனால் தமிழ் சினிமாவில் ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு இப்போது படங்களும் பெரிய அளவில் இல்லாத நிலையில் அவருக்கு போட்டியாக டாப்ஸி வந்திருக்கிறார்.

Also Read : தனுஷ் அதிரடியாய் கலக்கிய சமீபத்திய 6 படங்கள்.. சைக்கோவாய் மிரட்டிய நானே வருவேன்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்