அத்துமீறி ஆட்டம் போடும் விஜய் சேதுபதி.. வாலை ஒட்ட நறுக்கிய அட்லீ

அட்லீ இயக்கத்தில் பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாருக்கான் நடிக்கும் திரைப்படம் ஜவான். இந்த படத்தின் படப்பிடிப்பானது கோவா மற்றும் மும்பையில் நடந்தது. தற்போது அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்காக படக்குழு சென்னை வந்தடடைந்தது. தற்போது இந்த படக்குழுவுடன் விஜய்சேதுபதியும் இணைந்து விட்டார்.

இயக்குனர் அட்லீ தளபதி விஜயுடனான பிகில் திரைப்படத்திற்கு பிறகு பாலிவுட் கிங்கான் என்று அழைக்கப்படும் நடிகர் ஷாருக்கானுடன் ஜவான் திரைப்படத்தில் இணைகிறார். இந்த படத்தில் ஹீரோயினாக நயன்தாரா நடிக்கிறார். ராஜா ராணி, பிகிலுக்கு பிறகு நயன்தாரா அட்லீயின் திரைப்படத்தில் நடித்து கொண்டிருக்கிறார்.

Also Read: வரிசையாக தோல்வி இருந்தும் நிக்ககூட நேரம் இல்லாத விஜய் சேதுபதி.. கைவசம் இத்தனை படங்களா?

பேட்டை, மாஸ்டர், விக்ரம் பட வெற்றிகளை தொடர்ந்து மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இப்போது ஷாருக்கானுக்கு வில்லனாக நடிக்கின்றார். விஜய்சேதுபதி முதன்முதலில் அட்லீயுடன் இணைகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பில் விஜய் சேதுபதி கலந்து கொண்டிருக்கிறார்,

அப்போது அட்லீயின் உதவி இயக்குனர் விஜய் சேதுபதியிடம் ஸ்கிரிப்ட் சொல்லி இருக்கிறார். விஜய் சேதுபதி அதில் மாற்றங்களை சொல்லி இருக்கிறார். இதை அந்த உதவி இயக்குனர் அட்லீயிடம் கூறியிருக்கிறார். ஆனால் அட்லீ ஸ்கிரிப்ட் அப்படியே இருக்கட்டும் என்று கூறிவிட்டாராம்.

Also Read: ஒரே படத்தில் இளசுகளை கவர்ந்து காணாமல் போனே 6 இயக்குனர்கள்.. 96 படத்தை மறக்க முடியுமா?

இதை கேள்விப்பட்ட விஜய்சேதுபதி ஸ்கிரிப்ட் பேப்பரையே தூக்கி எறிந்து விட்டாராம். இது மிகப்பெரிய பிரச்சனை ஆகி சூட்டிங்கே கேன்சல் ஆகிவிட்டதாம். மொத்தம் 600 பேர் கலந்து கொண்ட இந்த படப்பிடிப்பு இப்படி பாதியிலேயே முடிந்து இருக்கிறது.

ஏற்கனவே படம் கொரோனாவால் கொஞ்சம் தாமதப்பட்டு இருந்தது. நயன்தாராவும் திருமணம் முடிந்து சில நாட்கள் கழித்தே படப்பிடிப்பில் கலந்து கொண்டார். அதை தொடர்ந்தே மும்பையில் மழை, வெள்ளம் ஆரம்பித்தது. இதனாலேயே படக்குழு சென்னை வந்தது . இந்த படத்திற்கு மேலும் மேலும் பிரச்சனை வந்து கொண்டே தான் இருக்கிறது.

Also Read: விஜய் சேதுபதியின் சம்பளம் 160 கோடியா.. அதிர்ச்சியில் கோலிவுட்

Next Story

- Advertisement -