ஒரே படத்தில் இளசுகளை கவர்ந்து காணாமல் போனே 6 இயக்குனர்கள்.. 96 படத்தை மறக்க முடியுமா?

சில இயக்குனர்களின் அறிமுக படமே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் தமிழ் சினிமாவில் அறிமுக இயக்குனர்கள் முதல் படத்திலேயே முத்திரை பதித்து அடுத்தடுத்த படங்களில் தங்களது திறமையை நிரூபிக்க தவறி உள்ளனர். அதுபோன்று 6 இயக்குனர்களை தற்போது பார்க்கலாம்.

நவீன் : பசங்க படத்தின் இயக்குனர் பாண்டியராஜின் சிஷ்யன் தான் இயக்குனர் நவீன். இவருடைய முதல் படம் மூடர் கூடம். இப்படத்தில் கதையை பார்த்தால் பெரிதாக எதுவும் இருக்காது. இதில் நான்கு முட்டாள் திருடர்களும் மற்றும் வாழ்க்கையை தொலைத்தாக சொல்லி வெளிநாட்டுக்குச் செல்ல துடிக்கும் வசதியான குடும்பம் தான். ஆனால் இதில் ஏகப்பட்ட முன் கதைகளை வைத்து விறுவிறுப்பாக இயக்கியிருந்தார் நவீன்.

விஜயகுமார் : உறியடி படத்தை விஜயகுமார் எழுதி, இயக்கி, தயாரித்து நடித்திருந்தார். நான்கு கல்லூரி நண்பர்கள் ஜாதி அரசியலால் எவ்வளவு கொடுமையான விஷயங்களை சந்திக்கிறார்கள் என்பது படத்தின் கதை. முதல் படமே வித்யாசமும், விறுவிறுப்பாகவும் எடுத்திருந்தார் விஜயகுமார். ஆனால் அதன் பின்பு அவருடைய இயக்கத்தில் வெளியான படங்கள் பெரிய வரவேற்பு பெறவில்லை.

அஸ்வின் சரவணன் : அஸ்வின் சரவணன் இயக்கத்தில் டாப்ஸி, வினோதினி ஆகியோர் நடிப்பில் 2019 வெளியான திரைப்படம் கேம் ஓவர். இப்படத்தில் கேம் தயாரிக்கும் ஒரு பெண் நிஜத்தில் தன்னை கொல்ல வரும் சைக்கோ கொலைகாரன் இடமிருந்து எவ்வாறு தப்பித்துக் கொள்கிறார் என்பதே இப்படத்தின் கதை.

பாலாஜி தரணிதரன் : விஜய் சேதுபதி, ராஜ்குமார், மெளலி ஆகியோர் நடிப்பில் பேஷன் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் சீதக்காதி. அழிந்துவரும் நாடகக் கலையை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டு இருந்தது. இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்கள் குவிந்தது.

ராம்குமார் : முண்டாசுப்பட்டி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ராம்குமார். முதல் படத்திலேயே நகைச்சுவை கலந்த வித்தியாசமான படைப்பை கொடுத்திருந்தார். இதற்கு அடுத்தபடியாக நேரெதிராக த்ரில்லர் படமான ராட்சசன் படத்தை இயக்கியிருந்தார். விஷ்ணு விஷால், அமலாபால் நடித்த ராட்சசன் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

பிரேம் குமார் : விஜய்சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியான 96 படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. தமிழ் சினிமா இப்படி ஒரு ரசனையான காதல் படத்தை இதுவரை பார்த்ததில்லை. படத்தின் ஆரம்பத்திலிருந்து க்ளைமாக்ஸ் காட்சிகள் வரை ரசிகர்களை மூழ்கடித்து இருந்தார் இயக்குனர் பிரேம்குமார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்