சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

விஜய் சேதுபதியின் சம்பளம் 160 கோடியா.. அதிர்ச்சியில் கோலிவுட்

உச்ச நட்சத்திரமாக உள்ள நடிகர்கள் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க தயங்குவார்கள். ஆனால் தற்போது உள்ள ஹீரோக்கள் துணிச்சலாக நெகட்டிவ் கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார்கள். அந்த ட்ரெண்டை ஏற்படுத்திவர் விஜய்சேதுபதி தான். அதுவும் அவர் வில்லனாக நடித்தது போதும் அவருடைய மார்க்கெட் எகிறி உள்ளது.

சமீபத்தில் விக்ரம் படத்தில் விஜய்சேதுபதியின் சந்தானம் என்ற நெகட்டிவ் கதாபாத்திரம் பலரையும் கவர்ந்தது. அதன் பிறகு அவர் ஹீரோவாக நடித்த படங்களும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்று வருகிறது. இவ்வாறு ஹீரோ, வில்லன் என மாறி மாறி பட்டையை கிளப்பி வருகிறார் விஜய் சேதுபதி.

தற்போது கோலிவுட் மட்டும் போதாது என பாலிவுட்டிலும் பல படங்களில் நடித்து வருகிறார். மேரி கிறிஸ்மஸ் என்ற படத்தில் கத்ரீனா கைப் உடன் இணைந்து விஜய் சேதுபதி நடித்து வருகிறார். இப்படம் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு வெளியாகயுள்ளது.

இந்நிலையில் தற்போது விஜய்சேதுபதியின் சம்பளமும் உயர்ந்துள்ளது. பார்சி என இந்தி மொழியில் உருவாகும் வெப் சீரிஸில் நடிப்பதற்காக விஜய் சேதுபதிக்கு 35 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் ஹிந்தியில் 4 படங்களில் விஜய்சேதுபதி நடித்து வருகிறார்.

இதில் ஒரு படத்திற்கு தலா 40 கோடி என மொத்தமாக 160 கோடி விஜய் சேதுபதி சம்பளம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதை அறிந்த கோலிவுட் வட்டாரம் தற்போது அதிர்ச்சியில் உறைந்துள்ளது. மேலும் விஜய்சேதுபதியின் ரசிகர்கள் அவரின் வளர்ச்சியை பார்த்து தற்போது மகிழ்ச்சியில் உள்ளனர்.

மேலும் விஜய் சேதுபதி தொடர்ந்து இதுபோன்ற வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து துணிச்சலாக நடிக்க வேண்டும் எனவும் அவரது ரசிகர்கள் விரும்புகின்றனர். இந்நிலையில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள படங்கள் அடுத்தடுத்து வெளியாகயுள்ளது.

- Advertisement -

Trending News