பேரம் பேசி நடந்த வசூல் வேட்டை, TVK-ல் இருக்கும் கருப்பு ஆடுகள்.. களை எடுக்க தயாராகும் தளபதி

Actor Vijay: விஜய்யின் கோட் செப்டம்பர் மாதத்தை முன்னிட்டு வெளிவர இருக்கிறது. அதை அடுத்து 69 ஆவது படத்தோடு அவர் சினிமாவுக்கு டாட்டா காட்ட இருக்கிறார்.

சமீபத்தில் இவர் தன்னுடைய அரசியல் கட்சியின் பெயரை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதே சூட்டோடு தற்போது நடைபெற இருக்கும் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும் தெரிவித்தார்.

மேலும் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என்பதையும் தெளிவாக வலியுறுத்தி இருந்தார். ஆனால் இப்போது அவருடைய கட்சியில் இருக்கும் சில நிர்வாகிகள் அதை மீறி இருக்கின்றனர்.

அதன்படி தென் மற்றும் வட மாவட்டங்களின் சில பகுதிகளில் ஒரு அரசியல் கட்சியுடன் நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்கள். அதைத்தொடர்ந்து அந்த கட்சிக்கு எங்கள் ஆதரவு உண்டு என வாக்கு கொடுத்ததாக கூறப்படுகிறது.

விஜய்யிடம் சிக்கிய கருப்பு ஆடுகள்

அது மட்டுமின்றி அந்த நிர்வாகிகள் தங்களுக்கு கீழ் இருப்பவர்களை கூட அந்தக் கட்சியுடன் இணைந்து செயல்பட கட்டாயப்படுத்தி வருகிறார்களாம்.

இதன் மூலம் சிறப்பான வசூல் வேட்டையும் நடப்பதாக கூறப்படுகிறது. இது அத்தனையும் தற்போது கட்சியின் உளவுத்துறை மூலமாக மேல் இடத்திற்கு சென்றுள்ளது.

ஏற்கனவே இப்படித்தான் ஒரு விஷயத்தில் மாட்டிய மாவட்ட தலைவர் அதிரடியாக நீக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து தற்போது கட்சியில் இருக்கும் மற்ற கருப்பு ஆடுகளும் சிக்கியுள்ளனர்.

தற்போது சினிமாவில் மட்டும் கவனம் செலுத்தி வரும் விஜய் இதனால் கடும் கோபத்தில் இருக்கிறாராம். விரைவில் இந்த புகாரை விசாரித்து அதிரடியாக ஒட்டுமொத்த பேரையும் களையெடுக்கும் வேலையும் தொடங்கும் என்று கூறப்படுகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்