புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

சேர்த்து வச்ச பேரெல்லாம் போச்சு.. ஹாலிவுட் படங்களை காப்பியடித்த லோகேஷ், வம்பில் சிக்கிய லியோ

Leo-Lokesh: ஏற்கனவே லியோ நாலா பக்கமும் பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. அதில் தற்போது வெளிவந்த ட்ரெய்லரை பார்த்த ரசிகர்கள் அது ஹாலிவுட் படங்களின் காப்பி என்பதை கண்டுபிடித்து லோகேஷை கண்டபடி கலாய்த்து வருகின்றனர். இதன் மூலம் விஜய்யும் அடுத்த வம்பில் சிக்கியுள்ளார்.

ரசிகர்கள் மாதக்கணக்கில் காத்திருந்ததன் பலனாக நேற்று மாலை லியோ ட்ரெய்லர் படுமாஸாக வெளியானது. லோகேஷ் தனக்கே உரிய பாணியில் ஒவ்வொரு காட்சியையும் ஆக்சன் சரவெடியாக கொடுத்து இருந்தார். அதிலும் வெறிபிடித்த சிங்கம் போல் ஆக்ரோஷமாக இருந்த விஜய்யின் நடிப்பும் மிரள வைத்தது.

Also read: கெட்ட வார்த்தை, வன்முறை, ரத்தம், பயத்தை காட்டிய விஜய்.. ஏமாற்றியதா லியோ ட்ரெய்லர்?

இப்படி ஒரு பக்கம் ட்ரெய்லர் கொண்டாடப்பட்டு வந்தாலும் சில சர்ச்சைகளும் விமர்சனங்களும் லோகேஷ் மீது பூதாகரமாக எழுந்துள்ளது. அதில் ஒன்றுதான் இந்த காப்பி பேஸ்ட் விவகாரம். ஏற்கனவே லியோ ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ் படத்தின் சாயல் என்று பேசப்பட்டு வந்தது.

இந்நிலையில் ரசிகர்கள் புல்லட் ட்ரெயின் படத்தின் காட்சி ஒன்று லியோ ட்ரெய்லரில் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். அதில் ஒரு சீனில் விஜய் கன் லோட் செய்யும் காட்சி வித்தியாசமாக இருந்து ரசிகர்களை கவர்ந்தது. அதை தான் லோகேஷ் ஹாலிவுட் படத்திலிருந்து சுட்டு இருக்கிறார்.

Also read: அழிவுக்கு ஆரம்பப் புள்ளி வைத்த லோகேஷ்.. மொத்த பாராட்டுக்கும் நான் ஒர்த்தில்லைன்னு நிரூபித்த ஒரே வார்த்தை

இதுதான் இப்போது பரபரப்பை கிளப்பி இருக்கிறது. இது நாள் வரை லோகேஷ் லியோவில் சரியான சம்பவம் செய்வார் என ஒட்டுமொத்த திரையுலகமும் ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால் ட்ரெய்லர் அந்த எதிர்பார்ப்பை பொய்யாக்கும் வகையில் இருந்தது நம்ப முடியாத அதிர்ச்சியாக உள்ளது.

அந்த அளவுக்கு ஓவர் வன்முறை, முகம் சுளிக்க வைக்கும் கெட்ட வார்த்தை என பல விஷயங்கள் அதில் நிறைந்து கிடைக்கிறது. இதன் மூலம் லோகேஷ் இத்தனை நாள் சேர்த்து வைத்த பெயரும் காற்றில் பறந்து விட்டது. ஆக மொத்தம் லியோ ட்ரெய்லர் எங்களை ஏமாற்றி விட்டது என ரசிகர்கள் வருத்தத்தோடு புலம்பி வருகின்றனர்.

Also read: பெரிய தப்புன்னு அர்ஜுனே வெறுத்த லியோ.. 20 வருஷத்துக்கு முன்னாடி ஹரால்டு தாஸ் எடுத்த சபதம்

- Advertisement -

Trending News