சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

அழிவுக்கு ஆரம்பப் புள்ளி வைத்த லோகேஷ்.. மொத்த பாராட்டுக்கும் நான் ஒர்த்தில்லைன்னு நிரூபித்த ஒரே வார்த்தை

மோஸ்ட் வான்டட் இயக்குனர்களில் லோகேஷ் பெயர் தான் முதலிடத்தில் இருக்கிறது. ஆனால் அதையெல்லாம் அவர் இன்னும் கொஞ்ச நாட்களில் காற்றில் பறக்க விட்டு விடுவார் என்று தெரிகிறது. நாம் எது செய்தாலும் சரிதான் என்ற ஒரு மனநிலையில் இருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.

அந்த மனநிலை தான் அவரை இப்பொழுது அழிவின் ஆரம்பத்திற்கு தள்ளப் போகிறது. இப்போதுள்ள ட்ரெண்ட் இதுதான் என்று தனக்குத்தானே மனதில் ஒரு எண்ணத்தை உருவாக்கி இருக்கிறார். அதில் எதை கொடுக்க வேண்டும், எப்படி கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு இல்லை.

Also Read : விஜய்யை சீண்டிப் பார்க்கும் கலாநிதி.. லியோ போஸ்டரால் ஏற்பட்ட குழப்பம்

ஆரம்பத்தில் இவர் படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது ஆனால் சமீபத்தில் இவருடைய படங்களில் நிறைய அருகருப்பான விஷயங்களை செய்து வருகிறார். பெரும்பாலும் போதை கலாச்சாரம், ரத்தக்களரி கெட்ட வார்த்தை போன்றவற்றையே திரையில் காட்டுகிறார்.

இப்படி இருக்கும் பட்சத்தில் கூடிய விரைவில் காணாமல் போய்விடுவார். இன்றைய இளைஞர்களை சீரழிக்கின்றன இவரது படங்கள். இப்பொழுது கூட வெளியாகி உள்ள லியோ டீசரில் மிக அருகருப்பான, பெண்களை இழிவுபடுத்தும் ஒரு கெட்ட வார்த்தையை கூட தெள்ளத் தெளிவாக விஜய்யை பேச வைத்திருக்கிறார்.

Also read: சிங்கத்தை சீண்டினால் என்னவாகும்?. இணையத்தில் வெளியான லியோ பட மிரட்டலான கதை

இதற்கு முன்னர் லோகேஷ் கனகராஜ் எடுத்த விக்ரம் படத்தில் கூட சில கெட்ட வார்த்தைகளுக்கு பீப் சவுண்ட் போட்டு மறைத்துள்ளனர். ஆனால் இப்பொழுது இதை அப்படியே திரையில் பேசுவதற்கு என்ன அவசியம் வந்தது என்று தெரியவில்லை.

இவர்தான் இப்படி என்றால், நல்ல சினிமாவில் அனுபவம் வாய்ந்த விஜய் இப்படி அப்பட்டமாக பேசுவது பெரிய தவறாக பார்க்கப்படுகிறது. இதற்கெல்லாம் என்ன காரணம் என்று கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். எப்படியாவது ஒரு படத்தை எந்த ரூபத்தில் யாவது ஓட வைத்து பணத்தில் குளித்து விட வேண்டும் என்பதுதான்,

Also read: தலையில் மிளகாய் அரைக்க பார்த்த லியோ டீம்.. ரிவிட் அடித்த லலித், உறைந்து போய் நிற்கும் விஜய்

- Advertisement -

Trending News