வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

கெட்ட வார்த்தை, வன்முறை, ரத்தம், பயத்தை காட்டிய விஜய்.. ஏமாற்றியதா லியோ ட்ரெய்லர்?

Leo Trailer Review: லியோ ட்ரெய்லர் எப்போது என்ற அறிவிப்பு வந்த நாளிலிருந்தே ரசிகர்கள் சோசியல் மீடியாவே கதி என கிடந்தனர். தயாரிப்பு தரப்பும் டைம் என்ன என்பதை குறிப்பிடாமல் உச்சகட்ட பிபியை ஏற்றி வந்தது. இப்படி பரபரப்பை ஏற்படுத்தி இருந்த ட்ரெய்லர் ஒரு வழியாக நேற்று மாலை வெளியானது.

அது ஒட்டுமொத்த ஆடியன்ஸின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்ததா என்று கேட்டால் நிச்சயம் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். மிகப்பெரும் ஆவலுடன் காத்திருந்த பல ரசிகர்களுக்கு அந்த ட்ரெய்லர் கடும் அதிர்ச்சியை கொடுத்தது என்பது தான் உண்மை. அந்த அளவுக்கு அதில் வன்முறை கொட்டி கிடந்தது.

Also read: எவ்வளவு பெரிய தூண்டில் போட்டாலும் சிக்காத ரெட் ஜெயன்ட்.. லியோவுக்கு லலித் போடும் தப்பு கணக்கு

பொதுவாக லோகேஷ் படங்களில் இது போன்ற ஆக்சன் காட்சிகளுக்கு பஞ்சம் இருக்காது. ஆனால் லியோ இதுவரை தமிழ் சினிமாவில் பார்த்திராத அளவுக்கு வன்முறை, கெட்ட வார்த்தை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் என முழு ஆக்ரோஷமாக உருவாகி இருக்கிறது. காட்சிக்கு காட்சி துப்பாக்கி சத்தம், கொலை என ட்ரெய்லர் பார்ப்பவர்களுக்கு பயத்தையே கொடுத்திருக்கிறது.

அதிலும் விஜய் ஒரு காட்சியில் பேசும் மோசமான கெட்ட வார்த்தை நிச்சயம் எதிர்பாராத ஒன்றாகும். அவருக்கு ஏகப்பட்ட குழந்தை ரசிகர்கள் இருக்கின்றனர். லோகேஷ் அதைப்பற்றி யோசிக்காமல் ட்ரெய்லரிலேயே இப்படி ஒரு காட்சியை வைத்திருக்கிறார் என்றால் இன்னும் படத்தில் என்னென்ன வார்த்தைகள் இருக்குமோ என்பதை நினைத்தாலே பதறுகிறது.

Also read: எஸ்ஏசி- இன் இந்த 5 படத்தால் பொம்பள சகிலா என அடைமொழி வாங்கிய விஜய்.. முகம் சுளிக்க வைத்த அடல்ட் அஸ்திவாரம்

இதுதான் இப்போது சோசியல் மீடியாவில் அதிர்ச்சி விலகாத நிலையில் பேசப்பட்டு வருகிறது. அது மட்டுமின்றி லோகேஷ் தமிழ் சினிமாவை தவறான பாதைக்கு கொண்டு செல்கிறார் என்ற கருத்துக்களையும் பார்க்க முடிகிறது. இப்படி கலவையான விமர்சனங்களை பெற்று வரும் ட்ரெய்லரில் விக்ரம் பட சாயலும் இருக்கிறது.

விஜய்யின் ருத்ர தாண்டவம் புல்லரிக்க வைக்கிறது என்றாலும் பின்னணி இசையை பொருத்தவரை அனிருத் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம் என்பதே பலரின் கருத்தாக இருக்கிறது. இப்படி பெரும் விவாதமாக மாறி இருக்கும் லியோ ரிலீசுக்கு பிறகு எந்த மாதிரியான விமர்சனங்களை சந்திக்கும் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Also read: விஜய்யின் பேச்சை மீறி நடக்கும் அநியாயம்.. அடுத்த முதல்வர் தளபதியா, உதயநிதியா.? குளிர் காயும் ப்ளூ சட்டை

- Advertisement -

Trending News