பெரிய தப்புன்னு அர்ஜுனே வெறுத்த லியோ.. 20 வருஷத்துக்கு முன்னாடி ஹரால்டு தாஸ் எடுத்த சபதம்

Arjun In Leo Movie: ஒரு படம் இந்த அளவுக்கு ஹைப்பை ஏற்படுத்தி மக்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்திருக்கிறது என்றால் அது லியோ படமாக தான் இருக்கும். அதற்கு காரணம் லோகேஷின் கதையும், விஜய்யின் நடிப்பும் தான். அப்படிப்பட்ட இவர்கள் கூட்டணியில் உருவாகி இருக்கும் லியோ படம் வருகிற 19ஆம் தேதி ரசிகர்களை திருப்திப்படுத்தும் விதமாக தியேட்டர்களை அலங்கரிக்க வருகிறது.

அந்த வகையில் நேற்று வெளியான ட்ரைலரை பார்த்து ரசிகர்கள் ஆரவாரமாக கொண்டாடி வருகிறார்கள். இன்னொரு பக்கம் இந்த படம் ரொம்ப வன்முறையாகவும், படத்தில் அதிகமான கெட்ட வார்த்தைகளும் இருக்கிறது என்று குற்றச்சாட்டு வைக்கப்பட்டு வருகிறது. அத்துடன் இப்படத்தின் ட்ரெய்லர் விஜய்யின் ரசிகர்களுக்கு மட்டுமே ஒத்துப் போகும். மற்றபடி அனைத்து விதமான மக்களுக்கும் பிடிக்குமா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.

Also read: கெட்ட வார்த்தை, வன்முறை, ரத்தம், பயத்தை காட்டிய விஜய்.. ஏமாற்றியதா லியோ ட்ரெய்லர்?

இதற்கு அடுத்து இப்படத்தின் ட்ரெய்லரில் அர்ஜுனை பார்க்கும் பொழுது அவருடைய வில்லத்தனத்தை மொத்தமாக கொட்டி நெகட்டிவ் ரோலில் ஹரால்டு தாஸ் என்ற கேரக்டரில் நடித்து இருக்கிறார். . ஆனாலும் இந்த ட்ரெய்லரை பார்த்து அவரே கொஞ்சம் அப்செட் ஆயிருக்கிறார். அதற்கு காரணம் 20 வருஷத்துக்கு முன்னாடி அவர் முன்னணி ஹீரோவாக நடித்து வந்த காலத்தில் ஒரு சில படங்களில் மோசமான விமர்சனத்தை வாங்கி வணிக ரீதியாக இவருடைய படம் அடி வாங்கி இருக்கிறது.

அந்த சமயத்தில் எதற்காக இப்படி விமர்சனம் வருகிறது என்று யோசித்து பார்த்த நிலையில், இவர் நடித்த படங்களில் முக்கால்வாசி ஆக்சன் காட்சிகளும், கெட்ட வார்த்தைகளையும் பயன்படுத்தியதால் குடும்பத்துடன் யாருமே படத்தை பார்ப்பதற்கு வரவில்லையாம். அத்துடன் இவருடைய கேரியரும் ரொம்பவே சரிந்திருக்கிறது.

Also read: அவ்வளவு சம்பளம்லாம் கொடுக்க முடியாது.. விஜய்யும், சன் பிக்சரும் சேர்ந்து செய்த பெரிய துரோகம்

அப்பொழுது இதெல்லாம் என்ன காரணம் என்று யோசிக்கும் பொழுது தான் அதிகமான சண்டைக் காட்சிகளில் நடித்ததால் நமக்கு வரவேற்பு இல்லை என்பதை புரிந்து கொண்டிருக்கிறார். அதனால் அப்பொழுது ஒரு சபதம் எடுத்திருக்கிறார். அதாவது இனி நடிக்கப் போகும் எந்த படங்களிலும் சண்டைக் காட்சிகளிலும், தவறான வார்த்தைகளையும் பயன்படுத்தக் கூடாது என்று நினைத்திருக்கிறார்.

அதன்படியே இத்தனை வருட காலமாகவும் இவருடைய சபதத்தை கைவிடாமல் பாலோ பண்ணி வந்திருக்கிறார். ஆனால் இப்பொழுது விஜய் படம் என்பதாலும் பெரிய ப்ராஜெக்ட் கிடைத்திருக்கிறது என்ற காரணத்திற்காக நடிப்பதற்கு ஒத்துக் கொண்டிருக்கிறார். ஆனாலும் தற்போது லியோ படத்தின் டிரைலரை பார்க்கும் பொழுது ஏன்டா இந்த படத்தில் நடித்தோம் என்று புலம்பி தவிக்கிறாராம். அத்துடன் விஜய்யும் அதிகமான கெட்ட வார்த்தைகளை பேசி இருப்பது அர்ஜுனுக்கே ரசிக்கும் படியாக இல்லையாம்.

Also read: விஜயகாந்துக்கு இதை செய்யாமல் விஜய் அரசியலில் ஜொலிக்க முடியாது.. நன்றி கெட்டவன் என்ற பெயர் தேவையா!

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்