சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

சுமாரனா படத்திற்கு வெற்றி விழா கொண்டாட தயாரான லியோ தாஸ்.. ரஹ்மானால் தலைக்கு மேல் கத்தியுடன் விஜய்

Leo-vijay: விஜய் இப்போது தளபதி 68 படத்தில் நடித்து வருகிறார். இதற்கு முன்னதாக இவரது நடிப்பில் வெளியான லியோ படம் இப்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. வசூலில் நல்ல லாபத்தை பெற்று வந்தாலும் விமர்சன ரீதியாக லியோ படம் பின்தங்கி இருக்கிறது. இதனால் சில திரையரங்குகளில் லியோ படத்தை தூக்கி விட்டனர்.

இந்த சூழலில் லியோ ரிலீஸுக்கு முன்பு ஆடியோ லான்ச் நடத்த படக்குழு திட்டம் தீட்டி இருந்தது. ஆனால் அப்போது ஏஆர் ரகுமானின் மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சியில் நிறைய குளறுபடிகள் ஏற்பட்டது. ஆகையால் மக்கள் அவதிப்பட்ட செய்தி இணையத்திலேயே மிகப்பெரிய பிரளயத்தை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில் உதயநிதி ஸ்டாலினுக்கு லியோ படத்தின் தமிழ்நாட்டு ரிலீஸ் உரிமை கொடுக்காததால் கூட லியோ ஆடியோ லான்ச் நடக்க விடாமல் தடுத்துள்ளதாக கூறப்பட்டது. ஆனால் இதை தயாரிப்பு தரப்பில் இருந்து முழுவதுமாக மறுத்த நிலையில் மக்கள் கூட்டம் அதிகமாக வருவதால் இந்த விழாவை நடத்த முடியவில்லை என்று அறிவித்திருந்தனர்.

இந்நிலையில் லியோ படம் 500 கோடி வசூலித்ததாக தற்போது தகவல் வெளியாகி உள்ள நிலையில் படத்திற்கான சக்சஸ் மீட் கொண்டாட அரசாங்கம் அனுமதித்து உள்ளது. அதன்படி நேரு உள்விளையாட்டு அரங்கில் தான் லியோ படத்தின் சக்சஸ் மீட் நடைபெற இருக்கிறது.

இந்த விழாவிற்கு கிட்டத்தட்ட 200 இல் இருந்து 300 காருக்கு மட்டுமே அனுமதி கொடுத்துள்ளனர். மேலும் ரசிகர்கள் யாரும் பேருந்தில் வரக்கூடாது என்றும் கட்டுப்பாடு போடப்பட்டிருக்கிறது. அதோடு மட்டுமல்லாமல் நேரு உள்விளையாட்டு அரங்கில் உள்ள இருக்கைகளுக்கு ஏற்றார் போல் தான் டிக்கெட்டுகள் புக் செய்யப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டிருக்கிறது.

ஏனென்றால் ஏஆர் ரகுமான் நிகழ்ச்சியில் போலியான டிக்கெட்டுகள் விற்கப்பட்டு அதிக மக்கள் கூடியதால் அசம்பாவிதம் நடந்தது. ஆகையால் லியோ விழாவில் அதுபோன்று எதுவும் நடந்த விடக்கூடாது என்று தலைக்கு மேல் கத்தி இருப்பது போல் விஜய் பயந்து ஒவ்வொரு விஷயத்தையும் செய்து வருகிறார். மேலும் விஜய் இந்த மேடையில் குட்டி ஸ்டோரி சொல்வார் என்று ரசிகர்கள் அதிகம் விரும்புகின்றனர்.

- Advertisement -

Trending News