வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

ரஜினியை விட டபுள் மடங்கு சம்பளம் வாங்கும் நம்பர் ஒன் விஜய்.. போதும்னு சூப்பர் ஸ்டார் சொல்ல இதுதான் காரணம்

Rajini Vs Vijay: கோலிவுட்டில் கடந்த சில வருடங்களாக அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டம் யாருக்கு என்பது சர்ச்சை ஆக்கப்படுகிறது. 72 வயதானாலும் ரஜினி தன்னுடைய சூப்பர் ஸ்டார் பட்டத்தை யாருக்கும் விட்டுக் கொடுக்க முடியாது என ஜெயிலர் படத்தின் மூலம் நிரூபித்துக் காட்டினார்.

இப்போது வெளியான தகவலின் படி ரஜினியை விட டபுள் மடங்கு உச்சம் பெற்று இருக்கிறேன் என தளபதி மாஸ் காட்டுகிறார். தற்போது ரஜினியை விட விஜய் இரண்டு மடங்கு அதிகமாக சம்பளம் வாங்கி நம்பர் ஒன் நான் தான் என்பதை நிரூபித்திருக்கிறார்.

Also Read: ஆடியோ லான்சுக்கு ஆப்பு வச்சது போல ட்ரெய்லர் வெளியிட கிளம்பிய சர்ச்சை.. விஜய் மேல அப்படி என்ன காண்டு

லியோ படத்திற்கு விஜய் 125 கோடி சம்பளம் வாங்கினார். ஆனால் இப்போது தளபதி 68 படத்திற்கு ஏஜிஎஸ் நிறுவனம் 200 கோடியை அசால்டாக தூக்கிக் கொடுத்து விட்டனர். ஆனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய 170 ஆவது படத்தை ஒரு சில வருடத்திற்கு முன்பே கமிட் செய்ததால் அதற்கு வெறும் 90 கோடி தான் வாங்குகிறார்.

இது பழைய கமிட்மெண்ட் என்பதால் ரஜினி பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இருப்பினும் லைக்கா தயாரிப்பு நிறுவனத்திற்கு மட்டும் சூப்பர் ஸ்டார் தனி சலுகை கொடுக்கிறாரா என்றும் யோசிக்க தோன்றுகிறது. தளபதி 68 படத்திற்கு விஜய் வாங்கும் சம்பளத்தை விட 110 கோடி கம்மியாக ரஜினி தன்னுடைய தலைவர் 170 படத்தில் வாங்குவதுதான் பலரையும் ஆச்சரியப்படுத்துகிறது.

Also Read: சாதி சம்மந்தமான படத்தில் விஜய் நடிப்பாரா?. கதை தயார் செய்து வைத்திருக்கும் தனுஷ் பட இயக்குனர்

ஆனால் இதுதான் உண்மை. இவ்வளவு கம்மியாக ரஜினி சம்பளம் வாங்குவதற்கு முக்கிய காரணம், அவருடைய மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் படத்தை லைக்கா நிறுவனம் தயாரிப்பதுதான். அதுமட்டுமல்ல இந்த படத்திற்காக ரஜினியும் மொய்தீன் பாய் என்ற கேமியோ கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

அந்த ஒரு சென்டிமென்ட் தான் தலைவர் 170க்கு 90 கோடி போதும் என்று லைக்கா-விடம் சொல்லியிருக்கிறார். ஆனால் ரஜினியை விட இரண்டு மடங்கு அதிகமாக விஜய் வாங்குவதால் அடுத்த சூப்பர் ஸ்டார் ஆகுவதற்கு இது போதாதா என தளபதி ரசிகர்கள் கெத்து காட்டுகின்றனர்.

Also Read: விஜய், அர்ஜுனுக்கு சமுதாயத்தின் மேல் அக்கறை இல்லை.. லோகேஷ் மேல் பாய்ந்த ப்ளூ சட்டை மாறன்

- Advertisement -

Trending News