Vijay in Politics Plan: விஜய் எந்த அளவிற்கு நடிப்பின் நாயகனாகவும் வசூல் மன்னனாகவும் ஜெயித்துக் கொண்டு வருகிறாரோ, அதே மாதிரி அரசியலிலும் ஒரு கை பார்த்து விட வேண்டும் என்று முழுமூச்சாக இறங்கிவிட்டார். அந்த வகையில் தற்போது இவருடைய முழு டார்கெட்டும் மாணவர்கள் மீது தான் இருக்கிறது. அதாவது ஒட்டுமொத்த மாணவர்களின் மனதில் இடம் பிடித்து விட்டால் அதுவே இவருடைய வெற்றிக்கு முதல் படிக்கட்டாக அமைந்து விடும்.
அதனால் தான் கடந்த ஜூன் மாதம் இவருடைய பிறந்த நாளை ஒட்டி 234 தொகுதியிலும் அதிக மதிப்பெண் எடுத்த 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களை நேரில் சந்தித்து கல்வி ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்களை தொகுதி வாரியாக வழங்கி அவர்களை கௌரவித்தார். இதை அடுத்து காமராஜரின் பிறந்தநாள் அன்று இரவு நேர பயிலகங்களை தொடங்கினார்.
அடுத்ததாக தற்போது மாணவர்களுக்காக விஜய் மக்கள் இயக்கம் சார்பாக நூலகங்களை அமைக்க இருக்கிறார். அதாவது மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்கள் பயன்பெறும் வகையில் புத்தக வாசிப்பு திறன் மற்றும் பொது அறிவு சிந்தனை வளர்க்கும் நோக்கில் முதல் கட்டமாக “தளபதி விஜய் நூலகம்” திட்டம் நாளை சனிக்கிழமை(18/11/2023) அன்று காலை 10.35 மணியளவில் செங்கல்பட்டு மேற்கு மாவட்ட தொண்டர் அணி தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக தொடங்கி வைக்கப் போகிறார்.
Also read: தமிழ் புத்தாண்டுக்கு வசூல் வேட்டையாட வரும் 5 படங்கள்.. அஜித், விஜய்க்கு பயத்தை காட்டும் படம்
இதனை அடுத்து தாம்பரம் தொகுதி பாலாஜி நகர் 3வது தெரு, CTO காலனி, மேற்கு தாம்பரத்தில் அகில இந்திய பொதுச் செயலாளர் திரு.புஸ்ஸி ஆனந்த் அவர்கள் துவக்கி வைக்கிறார். இதனைத் தொடர்ந்து செங்கல்பட்டு மேற்கு மாவட்ட தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக பல்லாவரம் தொகுதியில் தாம்பரம் மாநகராட்சி மும்மூர்த்தி நகர் 5-வது தெருவில் ” தளபதி விஜய் நூலகம் திட்டத்தினை துவக்கி வைக்கிறார்.
இதேபோன்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மூன்று இடங்களிலும் அரியலூர், நாமக்கல் மேற்கு, சென்னை கிழக்கு வட சென்னை கிழக்கு, வடசென்னை வடக்கு இளைஞர் அணி மற்றும் வேலூர் தொண்டரணி ஆகிய மாவட்டங்களை சேர்த்து 11 இடங்களிலும் தளபதி விஜய் நூலகம் திறக்கப்பட உள்ளது.
மேலும் இரண்டாம் கட்டமாக வருகின்ற 23-11-2023 அன்று வியாழக்கிழமை திருநெல்வேலி மாவட்டத்தில் ஐந்து இடங்களிலும், கோவை மாவட்டத்தில் நான்கு இடங்களிலும், ஈரோடு மாவட்டத்தில் மூன்று இடங்களிலும், தென்காசி மாவட்டத்தில் இரண்டு இடங்களிலும், சேலம், புதுக்கோட்டை, கரூர், சிவகங்கை, திண்டுக்கல் மேற்கு, கன்னியாகுமரி மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களை சேர்த்து 21 இடங்களிலும் “தளபதி விஜய் நூலகம்” திறக்கப்பட உள்ளது. இப்படி மாணவர்களை தொடர்ந்து குறி வைத்து அரசியல் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்பதை குறிக்கோளாக வைத்து வருகிறார்.


Also read: விஜய்யை எதிர்த்ததால் அசிங்கப்பட்டு பதவி விலகிய தலைவர்.. கசக்கி பிழிந்த சம்பவம்