கோமாவில் இருந்து எழுந்து வந்த விஜய்.. மொத்த சக்சஸ் மீட்டையும் அசிங்கப்படுத்திய லோகேஷின் வலது கரம்

விஜய் ஆரம்பத்தில் ரஜினி ரசிகனாக தன்னை காட்டிக்கொண்டார். நடிப்பு முதல் உடல் பாவனைகள் அனைத்திலும் ரஜினியவே பின்பற்றினார். விஜய்யின் தந்தை சந்திரசேகரும் தான் விஜய்யை வைத்து இயக்கிய எல்லா பட பூஜைக்கும் ரஜினியை அழைத்து விடுவார்.

விஜய்யின் பட பூஜைகளுக்கு வரும் ரஜினியின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கி தான் விஜய் நடிக்க தொடங்குவார். இப்படி வளர்வதற்காக தலைவர் பெயரை உபயோகித்து, நாளடைவில் சினிமாவில் தனக்கு உண்டான இடத்தைப் பிடித்தார். ஒரு கட்டத்திற்கு மேல் அவர் கொடி உயர பறக்க ஆரம்பித்தது.

இன்று ஆலமரம் போல் சினிமாவில் வளர்ந்து நிற்கிறார். இப்பொழுது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இடத்திற்கு அவர் ஆசைப்படுகிறாரோ இல்லையோ, அவரின் ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகள் அவரை அந்த இடத்தில் வைத்து பார்க்க ஆசைப்படுகின்றனர்.

சூப்பர் ஸ்டார் சர்ச்சை நீண்ட காலமாக போய்க்கொண்டிருக்கிறது. அந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் இடத்தில் விஜய் மட்டுமே இருக்கிறார். ஆனால் அவரும் வாயை மூடிக் கொண்டு பதில் ஏதும் பேசாமல் கொழுந்து விட்டு எரியும் பிரச்சனையை வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டு பல நாட்கள் இருந்து வந்தார்.

இப்பொழுது நேற்று நடைபெற்ற லியோ படத்தின் வெற்றி விழாவில், விஜய் ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் தான், அது ரஜினிகாந்த் மட்டும் தான் என்று பேசியிருக்கிறார். இதை இப்போது மட்டும் கூறுவதற்கு என்ன அவசியம் வந்தது என்று தெரியவில்லை. ஒரு வருடமாக இந்த பிரச்சனையை எண்ணெய் ஊற்றி வளர்த்து விட்டு இப்பொழுது வேஷத்தை கலைக்கிறார்.

இவர் ஒரு புறம் என்றால் லியோ படத்தின் அசிஸ்டன்ட் டைரக்டர் ரத்தினகுமார் அவர் பங்கிற்கு ரஜினியை தாக்கி பேசியிருக்கிறார். ஜெயிலர் பட விழாவில் ரஜினி பேசிய குட்டி கதையை இங்கே இழுத்து மொத்த சக்சஸ் மீட்டையும் கேவலப்படுத்தி விட்டார். உயர பறக்கும் கழுகு, பசித்தால், கீழ தான் வரவேண்டும் என்று தலைவரை தாக்கி பேசி விட்டார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்