5 நாட்களில் மொத்தமாக பத்து தல, விடுதலை படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா..? இத்தனை கோடி வித்தியாசமா!

கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு மாஸ் ஹீரோவாக நடித்திருக்கும் பத்து தல படமும், வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி ஹீரோவாக அவதாரம் எடுத்திருக்கும் விடுதலை படமும் கடந்த மாதம் 30 மற்றும் 31ம் தேதிகளில் அடுத்தடுத்து ரிலீசானது.

பத்து தல மற்றும் விடுதலை படங்களின் வசூல் இன்று வரை எவ்வளவு என்பது தெரியவந்துள்ளது. பத்து தல படம் வெளிவந்து இதுவரை ஐந்து நாட்கள் ஆகிறது. ஆகையால் மொத்த வசூல் ஐந்து நாட்களில் 48 கோடி. ஆனால் மாநாடு, வெந்து தணிந்தது காடு ஆகிய படங்கள் ஹிட்டானதால் பத்து தல படமும் ஹிட் ஆகி சிம்புவுக்கு ஹாட்ரிக் வெற்றி கிடைக்கும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது.

Also Read: சும்மா இருந்த வாய்க்கு வெத்தல கொடுத்த எஸ் டி ஆர்.. அடுக்கடுக்காய் சிம்பு கொடுத்த ஹட்ரிக் தோல்விகள்

ஆனால் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான பத்து தல படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இதில் சம்பந்தமே இல்லாமல் பல விஷயங்களை புகுத்தி படத்தின் வசூலில் தொய்வு ஏற்பட்டது. அதே சமயம் இந்த படத்திற்கு போட்டியாக சூரி நடித்த விடுதலை படம் வெளிவந்து நான்கு நாட்கள் ஆகிறது.

இந்த படத்திற்கு இதுவரை 28 கோடி வசூலாகி இருக்கிறது. சிம்பு என்ற மிகப்பெரிய ஹீரோ நடித்து ஐந்து நாட்களில் 48 கோடி என்பது மிகக் குறைவான வசூலாக கருதப்படுகிறது. இதுவரை டாப் ஹீரோக்களுடன் போட்டி போட்ட சிம்பு இந்த முறை காமெடி நடிகர் சூரிதான் என அலட்சியமாக இருந்தார்.

Also Read: தியேட்டரிலேயே புருஷனுக்கு பளார் விட்ட நடிகை.. மொத்த அருவருப்பையும் தோளில் இறக்கிய வெற்றிமாறன்

ஆனால் சூரி சிம்புவுக்கு நல்லாவே தண்ணி காட்டி விட்டார். பத்து தல வெளியான அதே சமயம் சூரி நடித்து வெளிவந்திருக்கும் விடுதலை திரைப்படத்தின் நான்கு நாட்களில் 28 கோடி என்பது மிகப்பெரிய வசூலாக பார்க்கப்படுகிறது. இந்த இரு படங்களும் ஒரு நாள் வித்தியாசத்தில் ரிலீஸ் ஆனாலும் 20 கோடி வசூல் வித்தியாசம் வந்திருக்கிறது.

இதனால் சிம்புவை விட சூரி வசூலில் முந்திவிட்டார் என்ற உண்மை புலப்படுகிறது. பத்து தல படத்தின் மூலம் சிம்புவுக்கு எப்படியோ தெரியாது, ஆனால் விடுதலை படத்தின் மூலம் சூரி இனிமேல் ஆக்சன் ஹீரோவாக தமிழ் சினிமாவில் ரவுண்டு கட்டப் போகிறார்.

Also Read: விடுதலை ஒரு டப்பா படம்.. முயற்சி இல்லாத இயக்குனர் என கோபத்தில் பேசிய பிரபலம்.!

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்