Connect with us
Cinemapettai

Cinemapettai

viduthalai-soori

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தியேட்டரிலேயே புருஷனுக்கு பளார் விட்ட நடிகை.. மொத்த அருவருப்பையும் தோளில் இறக்கிய வெற்றிமாறன்

விடுதலை பட நடிகரின் அருவருப்பான கதாபாத்திரத்தை பார்த்த மனைவி திரையரங்கு வாசலிலேயே கன்னத்தில் அறைந்துள்ளார்.

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் அண்மையில் திரையரங்குகளில் ரிலீஸான விடுதலை படம் சக்கைப்போடு போட்டு வருகிறது. நடிகர் சூரி ஹீரோவாக அறிமுகமாகி நடித்துள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி, கவுதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட முக்கிய கதாபாத்திரங்கள் நடித்துள்ளனர். வெற்றிமாறனின் படங்கள் என்றாலே கதாபாத்திரம் பேசும் வகையில் நடிகர்கள் நடிப்பதை காட்டிலும் வாழ்வார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

அந்த அளவிற்கு ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் பார்த்து பார்த்து வெற்றிமாறன் செதுக்குவார். அப்படித்தான் விடுதலை படத்திலும் ஒரு கதாபாத்திரத்தை பார்க்கவே அருவருப்பை ஏற்படுத்தும் வகையில் செதுக்கியுள்ளார் . நான்கு ஆண்டுகளாக எடுக்கப்பட்ட இப்படத்தை காடு, கிராமம் உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்புகள் அதிகமாக எடுக்கப்பட்டது.

Also Read: விடுதலை பார்ட் 2-வில் ஹீரோ சூரி இல்ல.. கிளைமேக்ஸை வேற லெவலில் செதுக்கியிருக்கும் வெற்றிமாறன்

மேலும் நடிகர் சூரி நிஜ போலீஸ் போலவே தோற்றமளிக்க உண்மையான போலீஸ் ட்ரைனிங் கொடுக்கப்பட்டது. அந்த வகையில் இப்படத்தின் முக்கிய வில்லனாக கவுதம் வாசுதேவ் மேனன் நடித்த நிலையில், அவரை காட்டிலும் பார்ப்போருக்கு கோபப்படுத்தும் வகையில் நடிகர் சேத்தனின் கதாபாத்திரம் வில்லத்தனமாக அமைந்துள்ளது எனலாம்.

நடிகர் சேத்தன் சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்த நிலையில், சில படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்தவர். ஆனால் விடுதலை படத்தில் இவரது வில்லத்தனத்தை பார்ப்போருக்கு இவருக்குள் இப்படி ஒரு நடிகரா என கேட்கும் வகையில் ஓசி கதாபாத்திரத்தில் மிரட்டியுள்ளார். இந்த கதாபாத்திரத்தை அருவருப்பாக காட்ட வேண்டும் என்பதற்காகவே சேத்தனின் கெட்டப்பை வெற்றிமாறன் பார்த்து பார்த்து செதுக்கினாராம் .

Also Read: விடுதலை படத்தின் ரகசியத்தை உளறிய சேத்தன்.. வெகுளியாய் மொத்த உண்மையையும் உடைத்த ஓசி

முக்கியமாக ஹிட்லர் போல மூக்கின் கீழ் குறு மீசையுடனும், உடல் பருமனாகவும் , முகத்தில் வில்லத்தனம் தெரிய சில மேக்கப்புகள் உள்ளிட்டவை அவரது கதாபாத்திரத்துக்கு கனகட்சிதமாக இருந்ததாம். இதனிடையே சேத்தனின் மனைவியும், நடிகையுமான தேவதர்ஷினி விடுதலை படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்து திரையரங்கு வாசலிலேயே சேத்தன் கன்னத்தில் பளார் என அறைந்தாராம். அந்த அளவிற்கு அவரது கதாபாத்திரம் அருவருப்பாக இருந்ததாக சமீபத்திய பேட்டியில் கூறினார்.

மேலும் தனது தோழிகள் போன் செய்து எப்படி சேத்தனுடன் இதனை வருடங்கள் வாழ்கிறாய் என கேட்பதாகவும், அந்த அளவிற்கு இந்த கதாபாத்திரத்தில் சேத்தன் காட்சிதமாய் பொருந்தியது தனக்கு மகிழ்ச்சி என்றும் கூறியுள்ளார். அதுமட்டுமில்லாமல் ஆரம்பத்தில் 22 நாட்கள் கால்ஷீட் வாங்கிய வெற்றிமாறன் 122 நாட்கள் வரை ஓசி கதாபாத்திரத்தை எடுத்தாராம். மேலும் விடுதலை பாகம் இரண்டிலும் இந்த கதாபாத்திரம் பேசப்படும் என்று சேத்தன் தெரிவித்துள்ளார்.

Also Read: விடுதலை ஒரு டப்பா படம்.. முயற்சி இல்லாத இயக்குனர் என கோபத்தில் பேசிய பிரபலம்.!

Continue Reading
To Top