படப்பிடிப்புக்கு முன்பே ரிலீஸ் தேதி லாக் செய்த விடா முயற்சி.. மகிழ்த்திருமேனி சம்பவம் லோடிங்

நடிகர் அஜித்குமாரின் துணிவு திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு அவருடைய அடுத்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அவருடைய ரசிகர்கள் மற்றும் சினிமா வட்டாரத்தில் அதிகமாக இருந்தது. ஒரு வருடத்திற்கு முன்பே ஏ கே 62 என்னும் ப்ராஜெக்ட் அறிவிக்கப்பட்டு இருந்தாலும் இயக்குனர் மாற்றம், கதையில் திருப்தி இல்லை என ஜவ்வாய் இழுத்துக் கொண்டு போனது, அஜித்தின் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாகவே இருந்தது.

தளபதி விஜய் நடிக்கும் லியோ படத்தின் அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளிவர ஆரம்பிக்க அஜித் ரசிகர்களுக்கோ ஏகே 62 பற்றி எந்த தகவலும் தெரியாமல் ரொம்பவே தவித்துப் போயிருந்தார்கள். இந்நிலையில் அஜித்குமாரின் பிறந்தநாளுக்கு அவருடைய ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்கும் வகையில் படத்தின் தலைப்பு வெளியிடப்பட்டது. ஏகே 62 என்று அழைக்கப்பட்ட அந்த ப்ராஜெக்ட்டிற்கு விடாமுயற்சி என்னும் டைட்டில் வைக்கப்பட்டது.

Also Read:மொத்தத்தையும் லிஸ்ட் போட்ட அஜித்.. அப்பாடி மொத்த கண்டத்தில் இருந்தும் தப்பித்த மகிழ்திருமேனி

அஜித்தின் வீரம், விஸ்வாசம், விவேகம், வலிமை என்னும் ‘வி’ சென்டிமென்ட் வரிசையில் தற்போது அவருடைய 62 ஆவது படமும் இணைந்திருக்கிறது. இந்த படத்தை மகிழ்த்திருமேனி இயக்குகிறார். மேலும் படத்தின் கதாநாயகி மற்றும் பிற நட்சத்திரங்களின் தேர்வுகளும் முடிவு செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதைப் பற்றிய அப்டேட்டுகள் கூடிய விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அடுத்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டு இருக்கிறது. இந்த படத்தின் மற்ற வேலைகள் நடப்பதற்கு ஒரு வருட காலம் எடுத்துக் கொள்ளப்பட்டாலும் தற்போது மொத்த படத்தையும் 70 நாட்களில் முடிக்க திட்டமிட்டு இருக்கிறார் இயக்குனர் மகிழ் திருமேனி. அதாவது இரண்டு மாதத்திற்குள் இந்த படம் எடுத்து முடிக்கப்படும் என்று தெரிகிறது.

Also Read:ஏகே-62 வாய்ப்பு பறிபோக அஜித் காரணம் இல்ல.. முதல் முறையாக உண்மையை உளறிய விக்னேஷ் சிவன்

இந்த 70 நாட்களில் அஜித் மொத்தம் 40 நாட்கள் மட்டுமே கால்ஷீட் கொடுத்திருக்கிறாராம். இந்த படத்தின் படப்பிடிப்பானது மே மாத இறுதியில் தொடங்கப்பட இருக்கிறது. நடிகர் அஜித்குமார் ஜூன் மாதம் முதல் வாரத்தில் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. மேலும் விடாமுயற்சி திரைப்படம் இந்த வருட இறுதிக்குள் ரிலீஸ் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கும் இந்த விடாமுயற்சி திரைப்படத்தின் அப்டேட்டுக்காக கடந்த ஐந்து மாதங்களாக அஜித் ரசிகர்கள் தவம் கிடந்தார்கள் என்று தான் சொல்ல வேண்டும். விடாமுயற்சி என்னும் தலைப்பு ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தாலும் அஜித்திற்கு இந்த தலைப்பு கரெக்டாக இருக்கும் என்று அவருடைய ரசிகர்களே ஏற்றுக் கொண்டார்கள். மகிழ்திருமேனியின் படம் என்பதால் இந்த கதை அதிரடி ஆக்சன் கதையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read:விக்னேஷ் சிவனை மிஞ்சிய மகிழ் திருமேனி.. ஏகே 62-வுக்காக தூசி தட்டிய சூப்பர் ஹிட் படம்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்