அஜித்தை இயக்கிய 5 இயக்குனர்களை கமுக்கமாக தூக்கிய விஜய்.. 2 பேருக்கும் சரிசமமாக வந்த ஹிட் படங்கள்

Ajith and vijay In 5 Directors: ஒவ்வொரு காலகட்டத்திலும் இரண்டு முன்னணி நடிகர்களுக்கு இடையே போட்டி நிலவி ஒருவரை ஒருவர் மோதிக் கொண்டு வருவார்கள். அந்த வகையில் 90களில் இருந்து இப்போது வரை இரு துருவங்களாக விஜய் அஜித் போட்டி போட்டு வருகிறார்கள். இதற்கிடையில் அஜித்தை வைத்து இயக்கிய ஐந்து இயக்குனர்களிடம் கமுக்கமாக விஜய் கூட்டணி வைத்திருக்கிறார்.

அதிலும் ரெண்டு பேருக்கும் சரிசமமாக ஹிட் படங்களாக அமைந்திருக்கிறது. அதில் எஸ்ஜே சூர்யா இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு இரட்டை வேடங்களில் அஜித் வாலி படத்தில் நடித்து சூப்பர் ஹிட் வெற்றியை கொடுத்திருக்கிறார். அதே மாதிரி அடுத்த வருடமே எஸ்ஜே சூர்யா இயக்கத்தில் விஜய், ஜோதிகா இணைந்து குஷி படத்தில் நடித்து மக்களிடம் அதிக வரவேற்பை பெற்றிருக்கிறார்.

அடுத்ததாக இயக்குனர் பேரரசு இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு விஜய் மற்றும் திரிஷா இணைந்து திருப்பாச்சி படத்தில் நடித்து ஹிட் கொடுத்தார்கள். அதே மாதிரி அடுத்த வருடம் பேரரசு இயக்கத்தில் அஜித் திருப்பதி படத்தில் நடித்து மாபெரும் வெற்றியடைந்தது. அடுத்ததாக ஏஎல் விஜய் இயக்கத்தில் அஜித் 2007 ஆம் ஆண்டு கிரீடம் படத்தில் நடித்தார்.

Also read: விஜய், திரிஷா கிட்ட இருந்து இத கத்துக்கோங்க பாஸ்.. உச்சாணி கொம்பில் இருப்பதன் காரணம்

அதேபோல விஜய்யும் 2013 ஆம் ஆண்டு ஏஎல் விஜய் இயக்கத்தில் தலைவா படத்தில் நடித்து மாபெரும் வெற்றி பெற்றார். அடுத்ததாக ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் 2001 ஆம் ஆண்டு அஜித் தீனா படத்தில் நடித்து இவருடைய கேரியருக்கு மிக திருப்புமுனையாக அமைந்தது. அதுவரை ரொமான்டிக் படங்களில் நடித்து காதல் மன்னனாக வந்தவர், தீனா படத்திற்கு பின் ஆக்சன் ஹீரோவாக மாறி ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெற்றார்.

அதே மாதிரி விஜய் இவருடைய இயக்கத்தில் துப்பாக்கி, கத்தி, சர்கார் என்று மூன்று படங்களில் நடித்து தொடர்ந்து வெற்றியை அடைந்தார். இந்த மூன்று படங்களுமே விஜய்க்கு மிகப்பெரிய பிளாக் பஸ்டர் ஹிட் ஆகி அடுத்த லெவல் போவதற்கு முக்கிய காரணமாக இருந்திருக்கிறது.

அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித் அவருடைய 50வது படமான மங்காத்தா படத்தை 2011 ஆம் ஆண்டு நடித்து மாபெரும் வெற்றியை பார்த்தார். அதேபோல் தற்போது விஜய்யும் இவருடைய 68வது படத்தில் வெங்கட் பிரபுவுடன் கூட்டணி வைத்திருக்கிறார். இப்படத்திற்கான வெற்றி எப்படி இருக்கும் என்று படம் வெளி வந்தால் மட்டுமே தெரியும். முக்கியமாக இதில் 4 இயக்குனர்கள் முதலில் அஜித்தை வைத்து எடுத்த பின்பு தான் விஜய்யை வைத்து இயக்கியிருக்கிறார்கள்.

Also read: விஜய்க்கு கை கொடுக்க வரும் ரஜினி, அஜித்.. இந்தியளவில் பரபரப்பாகும் முக்கிய புள்ளிகள்