8 வருடம் கழித்து கவுண்டமணி நடிக்கும் அடுத்த பட கதை இதுதான்?. வெற்றிக் கழகத்துக்கு எடுக்க போகும் பாடம்

Thalapathy Vijay: ‘வட்ருபி மண்டையா’, ‘கோமுட்டி தலையா’, ‘ ‘ஜிலேபி கொண்ட’ , ‘ஆஃப்ரிக்கா அங்கிள்’ இந்த மாதிரி வார்த்தைக்கெல்லாம் ஆஸ்தான சொந்தக்காரர்தான் நக்கல் மன்னன் கவுண்டமணி. சில காமெடிகளை பார்க்க பார்க்க சலிப்பு தட்டி விடும். ஆனால் இவருடைய காமெடியை இன்னும் ௧௦௦ வருஷத்துக்கு அப்பறம் கூட பாத்து சிரிக்கலாம்.

இன்னொரு வாழைப்பழத்துக்கு வழி தெரியாம முழிச்சது, பெட்டர்மாக்ஸ் லைட்ட உடைச்சதுனு தலைவன் பண்ணாத சம்பவமே இல்ல. காமெடியன்கள் என்றால் ஹீரோக்களிடம் உதை வாங்கி ரசிகர்களை சிரிக்க வைக்கணும்னு எந்த அவசியமும் இல்லை என்பதை நிரூபித்து காட்டியவர்.

ரஜினி தொடங்கி இளம் ஹீரோக்கள் வரை நம்ம ஆளு கிண்டல் பண்ணாத நடிகர்களே இல்லை என்று சொல்லலாம். செந்தில அடிச்சு தான் கவுண்டமணி பேர் வாங்கினாருனு ஒரு சிலர் குறைபட்டுக்குறாங்க . ஆனா செந்திலிடம் படாதபாடு பட்டு இருக்கிறார் கவுண்டமணி.

பூங்காவனம், அழகுமணி, மணிமேகலை போன்றவர்களை கவுண்டமணியை ஏமாத்தி செந்தில் கல்யாணம் பண்ணி வச்சது எல்லாம் மறக்க முடியமா. கவுண்டமணி சினிமாவை விட்டு ஒதுங்கியதற்கு பல காரணங்கள் சொல்லப்படுது.

சமீபத்தில் விஜயகாந்த் மறைவுக்கு அஞ்சலி செலுத்த கவுண்டமணி நேரில் வந்திருந்தார். நடை தளர்ந்து, வயதான தோற்றத்தில் இருக்கும் அவரை பார்க்கும் பொழுது ரொம்பவே கஷ்டமா தான் இருந்துச்சு. ஆனா தலைவன் வயசு எல்லாம் எனக்கு ஒரு மேட்டரே இல்லனு சமீபத்தில் செஞ்சு காட்டி இருக்காரு.

வெற்றிக் கழகத்துக்கு எடுக்க போகும் பாடம்

கவுண்டமணி இயக்குனர் சாய் ராஜகோபால் இயக்கத்தில் ஒத்த வோட்டு முத்தையா படத்தில் நடிச்சிட்டு இருக்காரு. இந்த படத்துக்காக கிட்டத்தட்ட எட்டு மணி நேரம் தொடர்ந்து டப்பிங் பேசி அசத்தி இருக்காரு. இந்த படம் முழுக்க முழுக்க அரசியல் பற்றி நையாண்டியாக எடுக்கப்பட்டு இருக்கிறது.

தளபதி விஜய்க்கு கவுண்டமணிய ரொம்ப புடிக்கும்னு எல்லாருக்கும் தெரியும். அவர் கட்சி ஆரம்பிச்சு இருக்கும் இந்த சமயத்துல ஒத்த வோட்டு முத்தையா ஒரு பெரிய பாடமாக இருக்கட்டும்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்