வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

தளபதி 68-இல் ஒன்று கூடும் 3 லெஜன்ட்.. வெங்கட் பிரபு செய்ய காத்திருக்கும் தரமான சம்பவம்

Thalapathy 68: இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் தற்போது தன்னுடைய 68 ஆவது படத்தில் பணியாற்றுகிறார். இந்த படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்று ஒரு பாடல் காட்சி பிரசாத் லேபில் படமாக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. விரைவில் ரிலீஸ் ஆகப் போகும் லியோ படத்தின் ஹைப்பை தாண்டி தற்போது இந்த படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு கிளம்பி இருக்கிறது.

விஜய் படத்தை பொருத்தவரைக்கும் எப்போதுமே அவருடைய ரசிகர்களுக்கு திரையில் விஜய்யை தாண்டி கவனிப்பதற்கான விஷயங்கள் எதுவுமே இல்லாதது போன்று தான் இருக்கும். ஆனால் தளபதி 68 அப்படி கிடையாது. இயக்குனர் வெங்கட் பிரபு தரமாக திட்டமிட்டு பயங்கரமான ஒரு சம்பவத்தை செய்ய இருக்கிறார். இது 90ஸ் கிட்ஸ்களுக்கு ஒரு ட்ரீட் என்று கூட சொல்லலாம்.

தளபதி 68-இல் டாப் ஸ்டார் பிரசாந்த் இணைந்திருப்பது அனைவரும் அறிந்த விஷயம் தான். நீண்ட வருடங்களுக்குப் பிறகு பிரசாந்த், தமிழ் சினிமாவுக்கு கம்பேக் கொடுக்கிறார். மேலும் விஜய் மற்றும் பிரசாந்த் இருவருமே ஒரே நேரத்தில் வளர்ந்து வந்த ஹீரோக்கள். இவர்கள் இருவருமே இப்போது எந்த ஈகோவும் இல்லாமல் ஒரு படத்தில் இணைந்து பணியாற்றுவது என்பது பாராட்டுதலுக்குரிய விஷயம்.

டாப் ஸ்டார் பிரசாந்த் அன்றைய காலகட்டத்தில் காதல் இளவரசன் என்பதை தாண்டி நன்றாக நடனம் ஆட கூடியவர். இவருக்கு கிளாசிக் மற்றும் பிரேக் டான்ஸ் தெரியும். அதேபோன்றுதான் படத்தில் இணைந்திருக்கும் மற்றொரு நாயகன் பிரபுதேவாவும். பிரபுதேவாவின் நடனத்தை பற்றி யாருக்கும் சொல்லி தெரிய வேண்டும் என்ற அவசியம் இல்லை.

தளபதி விஜய்க்கு பாதி பேர் ரசிகராக ஆனதற்கு முக்கிய காரணமே அவருடைய நடனம் தான். எவ்வளவு கஷ்டமான ஸ்டெப்பையும் ஈஸியாக ஆட கூடியவர். அவருடன் ஆடுவதற்கு மற்ற நடிகர்கள் மற்றும் நடிகைகள் தான் தடுமாறுவார்கள். அப்படி இருக்கும் பொழுது நடனத்தில் பிச்சு உதறக்கூடிய பிரசாந்த் மற்றும் பிரபுதேவா இந்த படத்தில் இணைந்து இருக்கிறார்கள்.

கண்டிப்பாக தளபதி 68ல் விஜய், பிரசாந்த் மற்றும் பிரபுதேவா காம்போவில் ஒரு நடன காட்சி இருக்கும் என சொல்லப்படுகிறது. வெங்கட் பிரபு தன்னுடைய படத்திற்கு பக்காவாக திட்டமிட்டு இப்படி ஒரு விஷயத்தை செய்ய இருக்கிறார். இந்த காட்சியை திரையில் பார்க்கும் பொழுது திரையரங்கே ஸ்தம்பித்து விடும் என்பதில் மட்டும் எந்த சந்தேகமும் இல்லை.

- Advertisement -

Trending News