ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

வெங்கட் பிரபு அண்ட் கோ-வை வெட்டிவிட்ட விஜய்.. தளபதி 68 காக செய்யும் தியாகம்

Thalapathy 68: லியோ படம் இந்த மாதம் ரிலீஸாக உள்ள நிலையில் தளபதி 68 படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. காரணம் இந்த படத்தின் பூஜை சமீபத்தில் போடப்பட்ட நிலையில் இப்போது படப்பிடிப்பு தொடங்கி முதல் பாடல் எடுத்துக் கொண்டிருக்கின்றனர். இவ்வாறு தளபதி 68 படவேலை தீயாய் நடந்து கொண்டிருக்கிறது.

ஆனால் வெங்கட் பிரபுவை சுற்றி எப்போதுமே ஒரு நட்பு வட்டாரம் இருக்கும். இப்போது வெங்கட் பிரபு அண்ட் கோ-வை அப்படியே வெட்டி விட்டு உள்ளாராம். அதாவது சென்னை 600028 படத்தில் தொடங்கியும் இவர்களுக்கென்று ஒரு கூட்டம் இருக்கிறது. விடுமுறை என்றாலே ஒன்று கூடி விடுவார்கள். இவர்களது அலப்பறைக்கு அளவே இருக்காது.

Also Read : மறைமுகமாக அஜித், விஜய் செய்யும் தவறு.. மொத்த பித்தலாட்டமும் கல்லாவை நிரப்ப தான்

வெங்கட் பிரபு அண்ட் கோ மிகவும் கலகலப்பான கேங்காக இருக்கும் நிலையில் தனது படங்களில் அவர்களை பயன்படுத்தி வந்தார். அதுவும் விஜய் படம் என்றால் கண்டிப்பாக தனது நட்பு வட்டாரங்களுக்கு வாய்ப்பு கொடுப்பார் என எதிர்பார்த்த நிலையில் பூஜைக்கு கூட அவர்களை கூப்பிட வில்லையாம்.

இதற்கெல்லாம் காரணம் விஜய் தான் என்று பேசப்படுகிறது. மேலும் இது தளபதி படம் என்பதால் அவர் பேச்சுக்கு இணங்க வெங்கட் பிரபுவும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். மேலும் இந்த படத்தின் முதல் பாடலை பிரபுதேவா தான் கோரியோகிராப் செய்து வருகிறார். வெங்கட் பிரபுவின் நட்பு வட்டாரத்தில் இருந்து வைபவ் மற்றும் அஜய் ஆகியோர்தான் இந்த படத்தில் இடம் பெறுகிறார்கள்.

Also Read : ஐயோ அது ரொம்ப சின்ன பொண்ணுங்க.. பதறிய விஜய் சேதுபதி, ஷாக் கொடுத்த விஜய்

அதுவும் வெங்கட் பிரபு படம் என்றால் கண்டிப்பாக பிரேம்ஜி இடம் பெறுவார். ஆனால் இந்த படத்தில் பிரேம்ஜிகே வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது. ஆனால் அஜித்தை வைத்து மங்காத்தா படத்தை வெங்கட் பிரபு எடுத்த போது அவரது நட்பு வட்டாரம் எல்லோருமே அந்த படத்தில் நடித்திருந்தார்கள். படமும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றிருந்தது.

ஆனால் இப்போது விஜய்யின் படத்தில் பூஜைக்கு கூட வெங்கட் பிரபு தனது நண்பர்களை கூப்பிடாததால் அவர்கள் அப்சட்டில் இருக்கிறார்களாம். விஜய் படத்திற்காக தனது நண்பர்களை ஒதுக்கி வைத்து தியாகம் செய்திருக்கிறார் வெங்கட் பிரபு. மேலும் தளபதி 68 படம் நகைச்சுவை தோரணையுடன் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த படத்தைப் பற்றிய அடுத்தடுத்த அப்டேட்டுகள் விரைவில் வெளியாக உள்ளது.

Also Read : அரசியலால் சினிமாவுக்கு வைக்கும் முற்றுப்புள்ளி.. விஜய் கடைசியாக நடிக்கும் படம்

- Advertisement -

Trending News