வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

வேல ராமமூர்த்திக்கு ஆப்பு அடித்த எதிர்நீச்சல் இயக்குனர்.. குணசேகரன் கதாபாத்திரத்தில் ஏற்பட்ட ட்விஸ்ட்

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடர் டிஆர்பியில் முதலிடத்தை வகித்து வந்தது. ஆனால் சமீபத்தில் எதிர்பாராத விதமாக இந்த தொடரின் அச்சாணியாக செயல்பட்ட மாரிமுத்து மாரடைப்பால் உயிரிழந்தார். ஆதி குணசேகரனாக இனி யார் நடிக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது.

மேலும் மாரிமுத்து இறந்த மதியமே சன் தொலைக்காட்சியில் இருந்து வேல ராமமூர்த்திக்கு அழைப்பு வந்ததாக கூறியிருந்தார். கிடாரி, கொம்பன் போன்ற படங்களில் நடித்த வேலராமமூர்த்தி சின்னத்திரையில் நடித்து பரீட்சையும் இல்லாததால் இதுகுறித்து பேச்சு வார்த்தை நடத்தி வந்தார்.

Also Read: குணசேகரன் இடத்தை நிரப்ப அலோல்லப்படும் சன் டிவி.. பல லட்சங்கள் கொட்டியும் இழுப்பறியில் 5 நடிகர்கள்

அதோடு மட்டுமல்லாமல் பல படங்களில் கால்ஷீட் கொடுத்திருப்பதால் உடனடியாக எதிர்நீச்சல் தொடரில் நடிக்க முடியாது என்றும் கூறியிருந்தார். மேலும் வெளிநாட்டில் ஒரு மாதம் ஷூட்டிங் இருக்கிறதாம். ஆகையால் எதிர்நீச்சல் குழு வேறு ஒருவரை தான் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்திற்கு கொண்டு வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் எதிர்நீச்சல் புரோமோ வெளியாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. அதாவது லெட்டர் எழுதி வைத்துவிட்டு ஆதி குணசேகரன் காணாமல் போய்விட்டார் என்பது போல கதையை நகர்த்தி இருக்கிறார்கள். இதற்கு காரணம் வேல ராமமூர்த்தியை ரிஜெக்ட் செய்து விட்டு ஒரே அடியாக குணசேகரன் கதாபாத்திரத்தை இயக்குனர் முடிவுக்கு கொண்டு வந்து விட்டாரா என்ற யோசனையும் எழுகிறது.

Also Read: ஓவர் பந்தா, இழுத்தடிக்கும் கொம்பையா பாண்டியன்.. குணசேகரன் கதாபாத்திரத்திற்கு சன் டிவி பேரம் பேசிய அடுத்த 2 நடிகர்கள்

ஏனென்றால் கடந்த சில நாட்களாகவே சமூக ஊடகங்களில் வேல ராமமூர்த்தி சற்று ஆணவமாகவே பேசி இருந்தார். அதாவது குணசேகரன் கதாபாத்திரத்தில் ஒரு வேளை நான் நடித்தால் அவரை விட சிறப்பாக செய்வேன் என்று கூறியிருந்தார். இதுவே சிலருக்கு கோபத்தை ஏற்படுத்தி இருந்தது.

இதனால் கூட இயக்குனர் வேலராமமூர்த்தியை நிராகத்திருப்பார் என்றும் கூறப்படுகிறது. அல்லது வேல ராமமூர்த்தி படங்களில் பிசியாக இருப்பதால் அவர் எதிர்நீச்சல் தொடரில் கமிட்டாகும் வரை ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தை மறைத்து வைத்திருக்கலாம் என்ற முடிவையும் எடுத்திருக்கலாம். அவ்வாறு இனி எதிர்நீச்சல் தொடரின் எபிசோடுகள் பொறுத்து தான் கதையின் போக்கு தெரிய வரும்.

Also Read: ஆணவ பேச்சா இருக்கே, ஆதி குணசேகரன் விட சூப்பராக நடிப்பேன்.. பணத்தை கொட்டிக் கொடுக்க தயாரான கலாநிதி

- Advertisement -

Trending News