ஆணவ பேச்சா இருக்கே, ஆதி குணசேகரன் விட சூப்பராக நடிப்பேன்.. பணத்தை கொட்டிக் கொடுக்க தயாரான கலாநிதி

Ethir Neechal, Kalanithi Maran: இப்போது எந்த சமூக வலைத்தள பக்கத்தை எடுத்துக் கொண்டாலும் ஆதி குணசேகரனாக நடித்த மாரிமுத்துவின் வீடியோக்கள் தான் நிறைந்து இருக்கிறது. சினிமாவில் கிட்டத்தட்ட 35 வருடங்களுக்கு மேலாக பயணித்தாலும் கடைசியாக ஒன்றரை வருடம் அவர் எதிர்நீச்சல் தொடரில் நடித்த பிறகு தான் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

இந்த சூழலில் அடுத்ததாக எதிர்நீச்சல் தொடரில் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் யார் நடிக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் இருந்து வருகிறது. அந்த வகையில் சினிமாவில் நடித்து வரும் வேல ராமமூர்த்தி குணசேகரன் கதாபாத்திரத்திற்கு சரியாக பொருந்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read : நந்தினியை மோப்பம் பிடித்து வந்த குணசேகரனின் விசுவாசி.. சக்தி ஜனனிக்கு ஒர்க் அவுட் ஆகும் கெமிஸ்ட்ரி

இதனால் சன் தொலைக்காட்சியில் இருந்தும் இவருக்கு அழைப்பு வந்த நிலையில் இதுபற்றி யோசித்து சொல்வதாக கூறியிருக்கிறார். ஆனாலும் வேல ராமமூர்த்தியை தற்போது வரை சிலருக்கு தெரியாத நிலையில் எதிர்நீச்சல் தொடரில் நடித்தால் கண்டிப்பாக உலகம் முழுவதும் பிரபலமாகுவார் என்பதில் சந்தேகம் இல்லை.

குணசேகரனைப் போல வில்லத்தனம் கலந்த நகைச்சுவை காட்சியில் வேல ராமமூர்த்தியும் பின்னி பெடலெடுப்பார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் அவர் கலந்து கொண்ட போது சினிமாவில் தான் இப்போது பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறேன் எதிர்நீச்சல் தொடரில் நடிப்பதை பற்றி பேசிக் கொண்டு தான் இருக்கிறோம்.

Also Read : டிஆர்பிக்காக சன் டிவி செய்த மட்டமான வேலை.. குணசேகரன் கதாபாத்திரத்திற்காக போட்ட ஸ்கெட்ச்

மாரிமுத்து அந்த தொடரில் மிகவும் சிறப்பாக நடித்திருந்தார். ஒருவேளை குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்தால் அவரை விட இன்னும் அதிகமாக நடித்து பட்டையை கிளப்ப முயற்சி செய்வேன் என்று கூறியிருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் இவருடைய பேச்சு ஆணவமாக இருக்கிறதே என்று கூறி வருகிறார்கள்.

அதோடு மட்டுமல்லாமல் ஓவர் டைட்டில் பேமஸ் ஆன வேலராமமூர்த்தி இப்போது எதிர்நீச்சல் தொடரில் நடிக்க எவ்வளவு சம்பளம் கேட்டாலும் கொடுக்க கலாநிதி மாறன் தயாராக இருக்கிறாராம். ஏனென்றால் சன் டிவியின் அஸ்திவாரமாக இருக்கும் எதிர்நீச்சல் தொடர் டிஆர்பியை தக்க வைக்க வேண்டும் என்பதற்காக கலாநிதி இந்த முடிவு எடுத்துள்ளார்.

Also Read : ஆதி குணசேகரனாக வேல ராமமூர்த்தி நடிப்பாரா?. அவரே சொன்ன பளிச் பதில்

- Advertisement -spot_img

Trending News