மாமன்னனுக்கு முதல் சாய்ஸ் வடிவேலு கிடையாதா.? மாரி செல்வராஜின் மனம் கவர்ந்த அந்த நடிகர்

vadivelu-mariselvaraj
vadivelu-mariselvaraj

Actor Vadivelu: மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதியின் கடைசி படமாக சமீபத்தில் வெளிவந்த மாமன்னன் கலவையான விமர்சனங்களை பெற்றது. வடிவேலு, கீர்த்தி சுரேஷ், பகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்த இப்படத்தில் வைகை புயலின் கதாபாத்திரம் பெரும் பாராட்டுகளை பெற்றது.

இதுவரை காமெடியனாக மட்டுமே நாம் பார்த்து ரசித்த வடிவேலு முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் மகா நடிகனாக சிறப்புற நடித்திருந்ததாக பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வந்தனர். அது மட்டுமல்லாமல் இப்படத்தினால் அவருக்கு தேசிய விருது கூட கிடைக்கும் என்று புகழாரம் சூட்டினார்கள்.

Also read: படத்தைப் பார்த்துவிட்டு காரி துப்பினால் அந்தப் படம் தான் ஹிட்.. கீழ், மேல் என உதயநிதியை சீண்டிய அண்ணாச்சி

இப்படி வாழ்த்து மழையில் நனைந்து வரும் வடிவேலுவும் இந்த படத்திற்கு பிறகு தன் சம்பளத்தை கூட உயர்த்தி விட்டார். அந்த அளவுக்கு மாமன்னன் அவருக்கு ஒரு அடையாளத்தை கொடுத்திருக்கிறது. ஆனால் இந்த மாமன்னன் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர் கிடையாது என வெளிவந்துள்ள செய்தி ஆச்சரியமாக தான் இருக்கிறது.

அதாவது வடிவேலு பல சிக்கல்களில் சிக்கி வந்த சமயத்தில் தான் மாரி செல்வராஜ் இந்த கதையை படமாக்க முடிவு செய்திருந்தார். அப்போது அவருடைய மனதில் இந்த கேரக்டருக்கு பொருத்தமாக இருப்பார் என தேர்வு செய்திருந்தவர் நடிகர் சார்லி தான். பல்வேறு காமெடி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இவர் இப்போது குணச்சித்திர பாத்திரங்களில் நடித்து வருகிறார்.

Also read: திடீரென தற்கொலை செய்து கொண்ட வடிவேலுவின் ஜோடி.. உண்மையான காரணம் இதுதான்

அதனாலேயே மாரி செல்வராஜ் இவரை மாமன்னன் படத்தில் நடிக்க வைக்க திட்டமிட்டு இருந்தார். அதன் பிறகு எதற்கும் வடிவேலுவிடம் சென்று கேட்கலாம் அவர் நிச்சயம் ஒப்புக்கொள்ள மாட்டார் அதன் பிறகு சார்லியை அணுகலாம் என்று நினைத்திருக்கிறார்.

அதன்படி வடிவேலுவிடம் கேட்கும்போது உதயநிதியின் படம் என்பதால் அவர் தயங்காமல் ஒப்புக்கொண்டாராம். இப்படித்தான் இந்த மாமன்னன் கூட்டணி உருவாகி இருக்கிறது. ஒரு வேலை வடிவேலு மாட்டேன் என்று சொல்லி இருந்தால் சார்லி தான் மாமன்னனாக நடித்திருப்பார்.

Also read: மாமன்னனுக்கு பிறகு மாறிய வடிவேலுவின் இமேஜ்.. யார் சொல்றத நம்புறதுன்னு தெரியலையே!

Advertisement Amazon Prime Banner