படத்தைப் பார்த்துவிட்டு காரி துப்பினால் அந்தப் படம் தான் ஹிட்.. கீழ், மேல் என உதயநிதியை சீண்டிய அண்ணாச்சி

Imman Annachi: சன் டிவியின் குட்டி சுட்டிஸ் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் பட்டி தொட்டி எங்கும் பேமஸ் ஆனவர்தான் இமான் அண்ணாச்சி, அதன் பிறகு இவர் நிறைய படங்களில் காமெடி நடிகராகவும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இவர் சமீபத்தில் பட ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது உதயநிதியை பகிரங்கமாக தாக்கி பேசினார். அதிலும் அவர் நடித்த மாமன்னன் படத்தை வைத்து கிழித்து தொங்க விட்டார். தற்போது வெளியாகும் படங்களில் எல்லாம் ஒரு விஷயம் மட்டும் நன்றாக தெரிகிறது. எந்தப் படத்தை ரசிகர்கள் திரையரங்கில் பார்த்துவிட்டு வெளியே காரி துப்புகிறார்களோ அந்தப் படம் பயங்கர ஹிட் ஆகி விடுகிறது.

Also Read: மாமன்னனுக்கு பிறகு மாறிய வடிவேலுவின் இமேஜ்.. யார் சொல்றத நம்புறதுன்னு தெரியலையே!

அப்படிதான் சமீபத்தில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான மாமன்னன் படமும் ஏகப்பட்ட நெகட்டிவ் கமெண்ட்ஸ்களை பெற்றாலும் வசூலில் சக்கை போடு போடுகிறது. தற்போது புதிதாக ஒரு விஷயம் ட்ரெண்ட் ஆகிக்கொண்டிருக்கிறது. ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை தாக்கி பேசக்கூடிய படத்தை எடுத்தால் அந்த படம் தாறுமாறாக ஓடுகிறது.

இதைப் பார்த்துவிட்டு யார் யார் எந்த சாதியால் பாதிக்கப்பட்டார்களோ அவர்களுக்கெல்லாம் சவுக்கடி கொடுக்கும் விதமாக இப்போது சாதியை மையமாக வைத்த சமுதாய படத்தை எடுத்து கொண்டிருக்கின்றனர். இப்போது புதிதாக ஒரு படம் வருகிறது என்றால், இது எந்த சமுதாயத்து படம் என கேட்கும் அளவுக்கு சென்று விட்டது.

Also Read: மார்க்கெட் இல்லாததால் தர மட்டமாக இறங்கிய தமன்னா.. குடும்ப குத்து விளக்காக நடித்த 5 படங்கள்

அது கீழ் தட்டா, மேல் தட்டா என தட்டு தட்டாக பாகுபாடு காட்டி படத்தை எடுக்கின்றனர். அதிலும் மாமன்னனில் கொஞ்சம் எல்லை மீறியே காட்டியிருப்பது அபத்தமான செயல். ஆனால் இதற்கு முந்தைய தலைமுறையில் 125 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடிய தரமான படங்களை எடுத்த இயக்குனர்கள் எல்லாம் இவ்வளவு கேவலமாக சாதியை வைத்து படம் எடுக்கவில்லை.

இப்போது தான் தமிழ் சினிமா கெட்டு குட்டிச்செவுராகபோய்விட்டது. இந்த விஷயத்தில் இருந்து தமிழ் சினிமா வெளிவர வேண்டும் என்று ஒரு தமிழனாய் டாப் இயக்குனர்களுக்கும் வளரும் இயக்குனர்களுக்கும் அன்பான வேண்டுகோளை வைக்கிறேன் என்று இமான் அண்ணாச்சி சமீபத்தில் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பேசினார்.

Also Read: மலையாளத்தில் அமோக கலெக்சன்.. காசு மழை கொட்டும் என ரீமேக் செய்து மண்ணை கவ்விய 5 படங்கள்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்