புதன்கிழமை, நவம்பர் 13, 2024

மொக்க படத்தை கொடுத்து ஏமாற்றிய ஆர்யா.. நம்பி மோசம் போன உதயநிதியின் ரெட் ஜெயண்ட்

Udhayanidhi, Arya: அரசியல் வாரிசாக இருந்தாலும் சினிமாவின் மீது உள்ள ஆர்வத்தால் உதயநிதி கதாநாயகனாக படங்களில் நடிக்க ஆரம்பித்தார். ஆரம்பத்தில் காமெடி படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்த உதயநிதி சமீபகாலமாக வேறு பாதையை நோக்கி சமூக அக்கறை கொண்ட படங்களில் நடித்து வந்தார். அதன்படி அவரது கடைசி படமான மாமன்னன் படம் சமீபத்தில் வெளியாகி வசூல் வேட்டையாடி வருகிறது.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான இப்படத்திற்கு ஆரம்பத்தில் விமர்சனங்கள் எழுந்தாலும் வசூல் பட்டையை கிளப்புகிறது. இந்நிலையில் உதயநிதி ஒருபுறம் நடிகர், அரசியல்வாதி என்பதை காட்டிலும் விநியோகஸ்தராக கொடி கட்டி பறந்து வருகிறார். அவரது ரெட் ஜெயண்ட் நிறுவனம் தான் பெரிய நடிகர்களின் படங்களை விநியோகம் செய்கிறது.

Also Read : சிவகார்த்திகேயனுக்காக உதயநிதி போட்ட ட்வீட்.. மாவீரனுக்கு வந்த முதல் விமர்சனம்

மேலும் இந்நிறுவனத்திடம் கணக்கு வழக்கு சரியாக இருக்கும் காரணத்தினால் தயாரிப்பாளர்கள் நாடி வருகிறார்கள். இந்நிலையில் ஆர்யா கேப்டன் படத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனத்திடம் வினியோகம் செய்ய கேட்டிருக்கிறார். இந்நிலையில் உதயநிதி சக்தி சௌந்தர்ராஜன் இன் முந்தைய படங்களான நாய்கள் ஜாக்கிரதை, டெடி போன்ற படங்கள் நன்றாக இருந்ததால் படத்தை விநியோகம் செய்ய சம்மதித்தார்.

அதோடு மட்டுமல்லாமல் ஆர்யா இந்த படம் அருமையாக வந்திருக்கிறது என்று கூறியிருக்கிறார். இதனால் படத்தை பார்க்காமலே உதயநிதி வாங்கி விட்டாராம். மேலும் முதல் நாள் மாரி செல்வராஜ் உடன் படத்தை பார்க்க திரையரங்கு சென்று இருக்கிறார். படத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் மோசமாக சொதப்பி வைத்திருந்தனர்.

Also Read : படத்தைப் பார்த்துவிட்டு காரி துப்பினால் அந்தப் படம் தான் ஹிட்.. கீழ், மேல் என உதயநிதியை சீண்டிய அண்ணாச்சி

இதனால் படம் எதிர்பார்த்த அளவு போகவில்லை. இவ்வாறு ஆர்யாவை நம்பி கேப்டன் படத்தை விநியோகம் செய்து நம்பி ஏமாந்து விட்டேன் என்று உதயநிதி  மாமன்னன் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கூறி இருந்தார். அந்தச் சமயத்தில் வீடியோ கால் மூலம் ஆர்யாவும் உடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சார்பட்டா பரம்பரை படத்திற்கு பிறகு ஆர்யாவுக்கு எந்த படமும் பெரிய அளவில் கை கொடுக்கவில்லை.

இதனால் இப்படத்தின் இரண்டாம் பாகத்தில் தான் முழு கவனத்தையும் ஆர்யா செலுத்தி வருகிறார். சார்பட்டா பரம்பரை ஓடிடியில் வெளியான நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் கண்டிப்பாக திரையரங்குகளில் வெளியாக வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். அதை ரெட் ஜெயண்ட் வெளியிட்டால் கண்டிப்பாக நல்ல லாபத்தை பார்க்கலாம்.

Also Read : ஆர்யா, கௌதம் கார்த்திக் கூட்டணியின் Mr X.. துணிவோடு சாகசத்திற்கு தயாரான அஜித் ஹீரோயின்

- Advertisement -spot_img

Trending News