வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

இதுக்கு ஒரு முடிவே இல்லையா மக்கா.. ஐஸ்வர்யாவால் பாண்டியன் ஸ்டோர்ஸில் வெடிக்கும் பூகம்பம்

Pandian Stores: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் ஒரே கதையை இயக்குனர் உருட்டி வருகிறார். இப்போது இந்த தொடரில் ஐஸ்வர்யாவால் ஒரு விடிவு காலம் ஏற்பட இருக்கிறது. அதாவது பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் அதிக பிரச்சனைக்கு காரணமாக இருப்பது கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் தான்.

வங்கி வேளையில் பணத்தை லஞ்சமாக பெற்றதாக கண்ணன் மீது வழக்கு இருக்கிறது. இதிலிருந்து கண்ணன் எப்படி வெளியே வரப் போகிறார் என்ற திருப்பங்களுடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் ஒளிபரப்பாகி வருகிறது. இப்போது யாரும் எதிர்பார்க்காத விதமாக தனத்திற்கு இருக்கும் பிரச்சனை ஊர் உலகத்திற்கே தெரிய வைத்து விட்டார் ஐஸ்வர்யா.

Also Read : விஜய் டிவி, சன் டிவி சீரியல் நடிகையை புரட்டி எடுக்க நினைத்த தயாரிப்பாளர்.. பகீர் கிளப்பிய சமீபத்திய பேட்டி

அதாவது யூடியூப் மூலம் வீடியோ போட்டு பல சிக்கலை சந்தித்து இருக்கிறார் ஐஸ்வர்யா. ஆனாலும் யூடியூப் மோகதால் இப்போது தங்களது வீட்டில் உள்ள ஒருவருக்கு கேன்சர் இருப்பதாக வீடியோ வெளியிட்டு இருக்கிறார். இதனால் பதறிப் போய் பாண்டியன் ஸ்டோர்ஸ் உறவினர்கள் எல்லோருமே அவர்களது வீட்டிற்கு படையெடுக்கிறார்கள்.

மீனாவின் அம்மா, அப்பா அவருக்கு தான் இந்த நோய் இருப்பதாக பதறிப் போய் கேட்கிறார்கள். அதேபோல் முல்லையின் பெற்றோரும் இவ்வாறு கேட்க, மூர்த்தி தனத்திடம் உனக்கு பிரச்சனை இருக்கிறதா என்று அதட்டுகிறார். கடைசியில் ஐஸ்வர்யா தனத்துக்கு தான் கேன்சர் பிரச்சனை இருப்பதை வெட்ட வெளிச்சமாக சொல்லி விடுகிறார்.

Also Read : டிஆர்பி கிங்கை வளைத்துப் போட்ட விஜய் டிவி.. ரெக்கார்டை உடைக்க போகும் பிக் பாஸ் சீசன் 7

இதனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் பூகம்பமே வெடிக்கிறது. இதற்கு ஒரு முடிவே இல்லையா மக்கா என்பது தான் ரசிகர்களின் என்னமாக இருக்கிறது. ஏனென்றால் ஆரம்பத்தில் நன்றாக ஓடிக்கொண்டிருந்த இந்த தொடர் எப்போது முடியும் என்ற நிலைமைக்கு இயக்குனர் அருவையாக ஓட்டிக் கொண்டிருக்கிறார்.

இப்போது ஐஸ்வர்யாவால் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் மட்டுமின்றி எல்லோருக்குமே தனத்திற்கு இருக்கும் பிரச்சனை தெரிந்துள்ளதால் ஏதாவது ஒரு விடிவு காலம் பிறக்கும். இதன் மூலம் விரைவில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடருக்கு பூசணிக்காய் உடைப்பார்கள் என்று ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

Also Read : பிக் பாஸால் முடிவுக்கு வரும் விஜய் டிவி சீரியல்கள்.. டிஆர்பியை ஏற்ற போட்ட பக்கா பிளான்

- Advertisement -

Trending News