ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

விஜய் டிவி, சன் டிவி சீரியல் நடிகையை புரட்டி எடுக்க நினைத்த தயாரிப்பாளர்.. பகீர் கிளப்பிய சமீபத்திய பேட்டி

Serial actress: முன்பெல்லாம் சில நடிகைகளை பார்க்கும் பொழுதே இவர்கள் சீரியலில் நடிக்க கரெக்டாக இருப்பார்கள் என தேர்வு செய்து நடிக்க வைப்பது உண்டு. ஆனால் கடந்த சில வருடங்களாக சீரியலில் அறிமுகமாகும் நடிகைகள் எல்லோருமே சினிமாவில் கதாநாயகிகளாகவே நடிக்கும் அளவிற்கு அழகும், வசீகரா தோற்றமும் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.

இப்படி நிறைய நடிகைகள் சினிமா பக்கம் செல்லாமல், சின்னத்திரைக்கு படையெடுப்பதற்கு அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை ஒரு மிகப்பெரிய காரணமாக இருக்கிறது. சமீபத்தில் சன் டிவி மற்றும் விஜய் டிவியின் சீரியல்களில் நடித்து வரும் முன்னணி நடிகை ஒருவர் தனக்கு ஏற்பட்ட இந்த அட்ஜஸ்ட்மென்ட் தொல்லையை பற்றி பேட்டி ஒன்றில் சொல்லி இருக்கிறார்.

Also Read:டிஆர்பி கிங்கை வளைத்துப் போட்ட விஜய் டிவி.. ரெக்கார்டை உடைக்க போகும் பிக் பாஸ் சீசன் 7

சன் டிவியின் இனியா மற்றும் விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை என்ற சீரியல்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பவர்தான் பிரதீபா ரெட்டி. இவர் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் தயாரிப்பாளர் ஒருவரால் அவர் சந்தித்த அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனையைப் பற்றி ரொம்பவும் வெளிப்படையாக பேசி இருக்கிறார். இந்த தொல்லைகளுக்கு சின்னத்திரை எவ்வளவோ பரவாயில்லை என்றும் சொல்லி இருக்கிறார்.

பிரதீபா ரெட்டி தொடக்கத்தில் சினிமாவில் நடிப்பதற்கே அதிக ஆர்வம் காட்டியிருக்கிறார். படங்களுக்கான நிறைய ஆடிசன்களிலும் இவர் கலந்து கொண்டிருக்கிறார். ஆனால் தேர்வாகி, படத்தில் ஒப்பந்தமாக கையெழுத்து போடுவதற்கு முன்பு இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் தரப்பிடமிருந்து மறைமுகமாக இவருக்கு அட்ஜஸ்ட்மென்ட் தொல்லைகள் கொடுக்கப்பட்டிருக்கிறதாம்.

Also Read:குழாயடி சண்டை போட பிக் பாஸ் வீட்டிற்கு வரும் 18 போட்டியாளர்கள்.. புது பொண்டாட்டியை தவிக்க விட்டு வரும் கிழவன்

இப்படி அட்ஜஸ்ட்மென்ட் செய்து வாய்ப்பு வாங்குவதற்கு அந்த தொழிலையே நேரிடையாக செய்து சம்பாதித்து விடலாம், எதற்கு இது போன்று அட்ஜஸ்ட்மென்ட் எல்லாம் செய்ய வேண்டும் என்று வெளிப்படையாக சொல்லி இருக்கிறார் பிரதீபா ரெட்டி. இது போன்ற இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் எப்பொழுதுமே மறைமுகமாக தங்களுடைய டீல் பற்றி பேசுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்களாம்.

ஒரு கட்டத்தில் பிரதீபா ரெட்டி, ஒரு படத்தின் ஆடிசனில் கலந்து கொண்ட போது அந்த படத்தின் தயாரிப்பாளர் நேரிடையாகவே அவரிடம் அட்ஜஸ்ட்மெண்ட் பற்றி பேசி அணுகி இருக்கிறார். இதனால் பிரதீபா இனி சினிமா நமக்கு வேலைக்கு ஆகாது என்று முடிவெடுத்து சீரியல் பக்கம் திரும்பி விட்டாராம். சீரியலில் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனைகள் இல்லை என்று சொல்ல முடியாது, இருந்தாலும் இது போன்ற அளவுக்கு இல்லை என்று சொல்லி இருக்கிறார்.

Also Read:விஜய் டிவியை அட்ட காப்பி அடித்து சன் டிவி தொடங்கும் 2ம் பாகம்.. அவசர அவசரமாக முடிவுக்கு வரும் நாடகம்

- Advertisement -

Trending News