வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

பிக் பாஸால் முடிவுக்கு வரும் விஜய் டிவி சீரியல்கள்.. டிஆர்பியை ஏற்ற போட்ட பக்கா பிளான்

Bigg Boss 7: விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி வருகின்ற அக்டோபர் மாதம் தொடங்க உள்ளது. கடந்த சீசன்களில் இல்லாத பல எதிர்பாராத விஷயங்கள் இந்த சீசனில் இடம்பெற இருக்கிறது. அதன்படி பிக் பாஸ் வீடு இரண்டாக இருக்கும் என கமல் அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். இந்த முறை சர்ச்சையான போட்டியாளர்கள் பங்கு பெற இருக்கிறார்கள்.

அதாவது பப்லு பிரித்திவிராஜ், சோனியா அகர்வால், அப்பாஸ் போன்ற யாரும் எதிர்பார்க்காத போட்டியாளர்களை தேர்வு செய்து வைத்துள்ளனர். இதுவரை இல்லாத அளவுக்கு சுவாரசியமாக இருக்க உள்ளது. மேலும் பிக் பாஸ் சீசன் 7 வர உள்ளதால் விஜய் டிவியின் சில சீரியல் முடிவுக்கு வருகிறது.

Also Read : குழாயடி சண்டை போட பிக் பாஸ் வீட்டிற்கு வரும் 18 போட்டியாளர்கள்.. புது பொண்டாட்டியை தவிக்க விட்டு வரும் கிழவன்

அதில் வந்த சுவடே தெரியாமல் முடிவுக்கு வருகிறது கண்ணே கலைமானே. நந்தா மாஸ்டர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வரும் இந்த சீரியலின் டிஆர்பி மந்தமாகத்தான் சென்று கொண்டிருந்தது. இப்போது கிளைமாக்ஸ் காட்சிகளுடன் சுவாரஸ்யமாக கண்ணே கலைமானே தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.

மேலும் செப்டம்பர் மாதத்துடன் இந்த தொடர் முடிவு பெறுகிறது. அடுத்ததாக விஜய் டிவியில் கிட்டத்தட்ட 5 வருடங்களுக்கு மேலாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் தொடர் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். அண்ணன், தம்பி பாசத்தை வைத்து ஒளிபரப்பாகி வரும் இந்த தொடர் இப்போது டிஆர்பியில் குறைவான ரேட்டிங் தான் பெற்று வருகிறது.

Also Read : ஒன்னு இல்ல ரெண்டு வீடா, டபுள் ட்ரீட் கொடுத்த கமல்.. சம்பவத்துக்கு தயாராகும் பிக் பாஸ் 7 ப்ரோமோ

அதுவும் இப்போது பாண்டியன் ஸ்டோர்ஸில் முக்கியமான கதாபாத்திரமான ஜீவா என்ற கேரக்டரில் வெங்கட் நடித்து வந்தார். இப்போது இதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கிழக்கு வாசல் என்ற தொடரில் கதாநாயகனாக நடித்து வருவதால் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் இருந்து விலகி இருக்கிறார்.

இவருக்கு பதிலாக வேறு ஒரு பிரபலம் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் இணைந்துள்ளார். இத்தொடரும் இறுதி கட்டத்தை நோக்கி தான் சென்று கொண்டிருக்கிறது. ஆகையால் இந்த தொடர்களை தவிர்த்து இன்னும் இரண்டு தொடர்கள் விரைவில் முடிவுக்கு வர இருக்கிறது. பிக் பாஸால் அதிரடியாக இந்த தொடர்கள் முடிவுக்கு வர இருக்கிறது.

Also Read : லிப்லாக், படுக்கையறை காட்சிகளில் தாராளம் காட்டும் பிக் பாஸ் ஜோடி.. எல்லாமே விஜய் அப்பா SAC போட்ட விதை

- Advertisement -

Trending News