மறைமுகமாக த்ரிஷா செஞ்ச வேலை.. மௌனம் காக்கும் தளபதி அரசியல் வாழ்க்கைக்கு சிக்கல்

Vijay Trisha: தளபதியின் 50 ஆவது பிறந்தநாள் கடந்த சனிக்கிழமை அன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த முறை விஜய் அரசியலுக்கு வரப்போவதை அறிவித்திருப்பதால் கொண்டாட்டம் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. பல அரசியல் தலைவர்களும் அவருக்கு வாழ்த்துக்களை சொல்லி இருந்தார்கள்.

இதைத் தாண்டி நடிகை திரிஷா சொன்ன வாழ்த்து இணையதளத்தில் பெரிய பேசு பொருளாக இருக்கிறது. அதாவது விஜய் – திரிஷா கிசு கிசு குருவி பட சமயத்திலேயே இருந்து வந்தது. இதனால் அவர்கள் இணைந்து நடிப்பதை கூட நிறுத்திக் கொண்டார்கள்.

அதன் பின்னர் லியோ படத்திற்காக லோகேஷ் கனகராஜ் இவர்கள் இருவரையும் மீண்டும் சேர்த்து வைத்தார். பழைய கில்லி ஜோடி எந்த அளவுக்கு கொண்டாடப்பட்டதோ அதே அளவுக்கு பழைய கிசுகிசுகளும் மீண்டும் உயிர் பெற்றது.

இது எதற்குமே விஜய் செவி சாய்ப்பதாய் இல்லை. ஆனால் த்ரிஷா மட்டும் அவ்வப்போது எரிகிற நெருப்பில் எண்ணெயை ஊற்றிக் கொண்டே இருக்கிறார். விஜய் அணிந்தது போல் ஒரு சட்டையை அணிந்த புகைப்படம் அவருடையது வெளியானது.

அதேபோல இரண்டு பேரும் ஷாப்பிங் போவது போன்ற டிவி வீடியோ வெளியானது. இதேபோன்று விஜய் அணிந்திருப்பது போலவே ஷூ ஒன்றை அணிந்து புகைப்படம் எடுத்து வெளியிட்டு இருந்தார். போதாத குறைக்கு விஜய் பிறந்த நாளில் அவருடன் லிப்டில் இருக்கும் ஒரு போட்டோவை ஷேர் செய்து வெளியிட்டு இருக்கிறார்.

மறைமுகமாக த்ரிஷா செஞ்ச வேலை

இது விஜய் ரசிகர்களுக்கே தற்போது எரிச்சலை கிளப்பி இருக்கிறது. எப்படி விஜய் மற்றும் திரிஷா மட்டும் தனியா லிப்டுக்குள் இருக்கிறார்கள் என்ற விவாதம் வேறு ஒரு பக்கம். இதற்கு வலைப்பேச்சு சேனலில் பிஸ்மி மற்றும் அந்தணன் ஒரு விளக்கம் கொடுத்திருக்கிறார்கள்.

அதாவது விஜய் சமீபத்தில் RA புறத்தில் தன்னுடைய கட்சிக்காக ஒரு அலுவலகத்தை வாங்கி இருக்கிறாராம். அதே அப்பார்ட்மெண்ட்டில் தனக்கு ஒரு பிளாட் வாங்கி இருக்கிறார் திரிஷா. மேலும் இந்தப் புகைப்படம் இருவரும் ஒன்றாக அந்த அபார்ட்மெண்ட் க்கு சென்றபோது எடுக்கப்பட்டு இருக்கலாம் என்று பேசி இருக்கிறார்கள்.

இந்தப் புகைப்பட விவகாரம் விஜய்யின் அரசியல் வாழ்க்கைக்கு தற்போது பெரிய சர்ச்சையாக மாறியிருக்கிறது. இன்னொரு பக்கம் படப்பிடிப்பு தளத்தில் கண்டினியூட்டி மிஸ் ஆகாமல் இருக்க உதவி இயக்குனர்கள் இதுபோன்று புகைப்படங்களை எடுத்து நடிகர்களுக்கு பகிர்வது உண்டு.

அதை வைத்துத்தான் திரிஷா எப்போது கேம் விளையாடிக் கொண்டிருக்கிறார் என்றும் படுகிறது. இன்னொரு பக்கம் இவர்களுடைய உறவு சாஃப்ட் லேண்டங்கில் இருக்கிறது என டூகே கிட்ஸ்கள் ஒரு புதிய கதையை சொல்லி இருக்கிறார்கள்.

அதாவது நாங்கள் இருவரும் உறவில் இருக்கிறோம் என்று ஒரே அடியாக போட்டு உடைக்காமல் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து சொல்வது தான் இந்த சாஃப்ட் லேண்டிங் என்கிறார்கள். விஜய் மற்றும் திரிஷா நெருங்கிய உறவில் இருப்பதை இப்படி படிப்படியாக மக்களுக்கு வெளிப்படுத்துவதாகவும் ஒரு கதை வருகிறது.

எது எப்படியோ மக்களுக்காக சேவை செய்ய களத்தில் இறங்கும் நேரத்தில் ஊர் வாயில் அவல் போட்டு மெல்ல வைத்திருக்கிறார் தளபதி.

எல்லையில்லாமல் போகும் த்ரிஷாவின் சேட்டைகள்

Next Story

- Advertisement -