அப்ப புரியல இப்ப புரியுது.. TVK- க்கு இப்படி ஒரு அர்த்தமா! திரிஷா கீர்த்தியோடு தளபதியை வச்சு செய்யும் நெட்டிசன்கள்

Vijay: கடந்த சில நாட்களாகவே சோசியல் மீடியாவில் விஜய் ரசிகர்களின் ஆதிக்கம் தான் அதிகமாக இருக்கிறது. சில தினங்களுக்கு முன்பு அவர் தன்னுடைய 50வது பிறந்தநாளை கொண்டாடினார். ஆனால் கள்ளக்குறிச்சி விவகாரத்தால் இந்த கொண்டாட்டத்திற்கு அவர் தடை போட்டார்.

ஆனாலும் ரசிகர்கள் அதை ஆரவாரப்படுத்தினார்கள்.. மேலும் பல பிரபலங்கள் விஜய்யுடன் எடுத்த போட்டோவை பகிர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்தார்கள். இதில் திரிஷா மற்றும் கீர்த்தி சுரேஷ் இருவரின் ட்வீட் தான் அதிர்வலையை ஏற்படுத்தியது.

ஏற்கனவே விஜய் தன் மனைவியை பிரிந்ததற்கு இந்த இரண்டு நடிகைகள் தான் காரணம் என்று பேசி வருகின்றனர். ஆனால் விஜய் தரப்பிலிருந்து இது பற்றி எந்த ஒரு விளக்கமும் இதுவரை கொடுக்கவில்லை.

trisha
trisha

இந்நிலையில் லியோ படத்தில் திரிஷா அவருடன் நெருக்கமாக நடித்தது அதன் பிறகு வெளியான சில போட்டோக்கள் என அனைத்தும் சர்ச்சையை கிளப்பியது. அதேபோல் கீர்த்தி சுரேஷ் விஜய் படத்தை பார்க்க முதல் காட்சிக்கு வந்ததும் பஞ்சாயத்தாக மாறியது.

vijay
vijay

இப்படி இருக்கும் சூழலில் விஜய்யுடன் நெருக்கமாக அதுவும் ஒரே கலர் உடை அணிந்த போட்டோவை கீர்த்தி வெளியிட்டார். அதற்கு போட்டியாக த்ரிஷாவும் விஜய்யுடன் இருக்கும் ஒரு போட்டோவை ஷேர் செய்தார்.

இது ஏடாகூடமாக பற்றி எரிந்த நிலையில் தற்போது திரிஷாவின் பழைய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில் திரிஷா ஒரு இருக்கையில் அமர்ந்திருக்கிறார். அவருக்கு அருகில் ஒருவர் கால் ஷூ மட்டும் தெரிகிறது.

விஜய்க்கு எதிராக நடக்கும் அரசியல்

அதை பார்த்த நெட்டிசன்கள் அது விஜய் தான் என சில ஆதாரங்களோடு கூறி வருகின்றனர். அது மட்டும் இன்றி TVK என்ற அவருடைய அரசியல் கட்சியின் பெயருக்கு பின்னால் இப்படி ஒரு அர்த்தம் இருக்கிறது எனவும் கூறி வருகின்றனர்.

அதன்படி திரிஷா விஜய் கீர்த்தி இதுதான் TVK என நெட்டிசன்கள் குறிப்பிட்டு வருகின்றனர். உண்மையில் இதற்கு பின்னால் மிகப்பெரும் அரசியல் இருக்கிறது. விஜய்யின் வளர்ச்சியை தடுக்க தான் இது போன்ற விஷயங்களை பரப்பி வருகின்றனர்.

ஏனென்றால் 2026 ஆம் ஆண்டு ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதுதான் அவருடைய நோக்கமாக இருக்கிறது. அதற்கேற்றார் போல் கள்ளக்குறிச்சி விவகாரத்தில் முதல் ஆளாக அரசுக்கு எதிராக தன்னுடைய கருத்தை அவர் பதிவு செய்தார். அது மட்டும் இன்றி சம்பவ இடத்திற்கு நேரிலும் சென்றிருந்தார்.

இதையெல்லாம் பார்த்த ஆளும் கட்சிக்கு ஆதரவான விசுவாசிகள் விஜய் பெயரை கெடுக்க இப்படி செய்வதாக ரசிகர்கள் கூறுகின்றனர். எது எப்படி இருந்தாலும் அரசியல் வாழ்வு என்று வந்துவிட்டால் இதையெல்லாம் சந்தித்து தான் ஆக வேண்டும்.

அதில் கீர்த்தி மற்றும் திரிஷா தாமதமாக பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தது ஏன்? இப்படி எல்லாம் பிரச்சனை வரும் என்று தெரிந்து தான் பதிவிட்டர்களா? என்பது போன்ற பல கேள்விகளும் உலா வந்து கொண்டிருக்கிறது.

பிறந்தநாள் வாழ்த்தால் டேமேஜ் ஆன விஜய்

Next Story

- Advertisement -