சங்கீதாவை வெறுப்பேத்த போட்டி போட்டு விஜய்யுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட திரிஷா, கீர்த்தி சுரேஷ்

Vijay: விஜய்யின் 50வது பிறந்தநாளுக்கு அரசியல் பிரமுகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் என அனைவரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். அதில் பல நட்சத்திரங்கள் விஜய்யுடன் எடுத்துக் கொண்ட போட்டோவை வெளியிட்டு இருந்தனர்.

அதில் பிரபு தேவா, வரலட்சுமி சரத்குமார், இயக்குனர் வம்சி என பல பிரபலங்களின் போட்டோக்கள் மீடியாவையே கலக்கியது. ஆனால் ஒட்டு மொத்த ரசிகர்களும் எதிர்பார்த்தது இரண்டு முக்கிய பிரபலங்களின் வாழ்த்து செய்தியை தான்.

அதன்படி பிறந்தநாள் முடிய போகும் தருவாயில் நேற்று இரவு கீர்த்தி சுரேஷ் விஜய்யுடன் இருக்கும் ஒரு போட்டோவை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் இருவரும் ஒன்று போல் ப்ளூ கலரில் உடை அணிந்து நெருக்கமாக நிற்கின்றனர்.

திரிஷா, கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட புகைப்படம்

அந்த பதிவில் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறிவிட்டு இறுதியில் அன்புடன் சுரேஷ்ஷ்ஷ் என கீர்த்தி குறிப்பிட்டு இருந்தார். இதை பார்த்த ரசிகர்கள் அப்ப பிறந்தநாள் வாழ்த்து நீங்கள் சொல்லலையா உங்க அப்பா தான் சொல்றாரா என கிண்டல் செய்து வருகின்றனர்.

keerthy
keerthy

இது ஒரு பக்கம் இருக்க தற்போது திரிஷா விஜய் உடன் இருக்கும் கலக்கல் போட்டோவை வெளியிட்டு வாழ்த்து கூறி இருக்கிறார். அதில் விஜய் கருப்பு நிற உடையில் ஸ்டைலாக போஸ் கொடுத்துள்ளார். இருவரும் மிரர் செல்ஃபி எடுத்துள்ளனர். அந்த போட்டோ இப்போது இணையத்தை கலக்கிக் கொண்டிருக்கிறது.

trisha
trisha

மேலும் இருவரின் வாழ்த்து செய்தியை பார்த்த ரசிகர்கள் சபாஷ் சரியான போட்டி என்றும் சின்னம்மா அண்ணி எனவும் கிண்டலடித்து கமெண்ட் செய்து வருகின்றனர். ஆக மொத்தம் சில நாள் எந்த கிசுகிசுவும் இல்லாத நிலையில் இந்த போட்டோக்கள் பத்த வச்சிட்டியே பரட்டை என்று ரீதியில் பரவி வருகிறது.

விஜய் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறிய பிரபலங்கள்

Next Story

- Advertisement -