செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 10, 2024

இன்று வரை தினறும் இந்திய அணி.. எவ்வளவு முக்கியும் ராகுல் ட்ராவிட்டால் முடியாத அந்த ஒரு விஷயம்

ராகுல் டிராவிட் இந்திய அணியின் தலைமை பயிற்சிளர். இன்று இந்திய அணி நம்பர் ஒன் அணியாக இருப்பதில் இவருடைய பங்கு இன்றியமையாதது. அப்பேற்பட்ட ராகுல் டிராவிட் இன்று வரை ஒரு விஷயத்திற்காக போராடி கொண்டிருக்கிறார். அவருக்கு எவ்வளவு போராடியும் இந்த ஒரு விஷயம் மட்டும் எட்டாத பலாக்காயாய் இருக்கிறது.

பல இளம் அதிரடி ஆட்டக்காரர்களை உருவாக்கி விட்டார் ராகுல் டிராவிட். இப்பொழுது 20 ஓவர் அணியில் அதிரடியாக செயல்பட்டு வரும் பல வீரர்கள் ராகுல் டிராவிட் வளர்த்தவர்கள் தான். சூரியகுமார் யாதவ்,  கே எல் ராகுல், இசான் கிசான், சுபம் கில் போன்ற தலைசிறந்த இளம் வீரர்களை உருவாக்கித் தந்தவர் நமது டிராவிட்.

இப்பொழுது டிராவிட், இன்று வரை இந்திய அணிக்காக எதிர்பார்த்துக் கொண்டிருப்பது ஒரு வேகப்பந்து வீச்சாளர். அந்த வேகப்பந்துவீச்சாளர் எப்படி இருக்க வேண்டும் என்பதை அவரே கூறுகிறார். முகமது சமி, சிராஜ் போன்ற அபாயகரமான பந்துவீச்சாளர்கள் இந்திய அணியில் இருந்தாலும் கூட டிராவிட் எதிர்பார்க்கிற விஷயமே வேறு.

டிராவிட், 6.5 அடி உயரம் உள்ள ஒரு இடது கை வேகப்பந்துவீச்சாளர் இந்திய அணிக்கு வேண்டும் என்று கேட்கிறார். ஒரு காலத்தில் ஜாகிர் கான் மற்றும் ஆசிஸ் நெஹ்ரா இந்திய அணிக்கு ஒரு பலமாக இருந்தனர். இவர்கள் வீசும் நேர்த்தியான பந்துகள் எதிரணிகளுக்கு தலைவலியை கொடுத்து வந்தது, ஆனால் இப்பொழுது அந்த மாதிரி ஒரு பவுலர் இந்தியாவில் இல்லை.

ஆஸ்திரேலியாவை பொறுத்தவரை மைக்கேல் ஸ்ட்ராக், பாகிஸ்தானில் ஷாகின் அப்ரிடி போன்றவர்களைப் போல் தலைசிறந்த வீரர்கள் எதிர்பார்க்கிறார் ராகுல் டிராவிட். இடது கைது வேகப்பந்து பந்துவீச்சாளர்கள், வலது கை பேட்ஸ்மேன்களுக்கு எப்பொழுதுமே ஒரு சிம்ம சொப்பனமாக இருப்பார்கள்.

அவர்கள் வீசும் அந்த ஸ்விங் மற்றும் பவுன்சர் பந்துகளை வலது கை பேட்ஸ்மேன்கள் எளிதாக சமாளிக்க முடியாது. அதுவும் அந்த பந்துவீச்சாளர் ஆல் ரவுண்டராக கிடைத்தால் இந்திய அணிக்கு கூடுதல் பலம் என்கிறார். அப்படி ஒரு பவுலர் இருந்தால் தயவு செய்து என்னிடம் கூட்டிட்டு வாருங்கள் என்று கேட்கிறார் இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்.

- Advertisement -

Trending News