Connect with us

Tamil Cinema News | சினிமா செய்திகள்

100 கோடி சம்பளம் வாங்கி சங்கத்தையே துருப்பிடிக்க வச்சிட்டீங்க.. ஆவேசத்தில் கத்திய லியோ வில்லன்

லியோ பட வில்லன் ஆவேச பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பாக பேசப்படுகிறது.

vijay-leo-movie

வாரிசு படத்திற்கு பின் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு காஷ்மீர், அதைத் தொடர்ந்து சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் விஜய்க்கு வில்லனாக அர்ஜுன், சஞ்சய் தத், மன்சூர் அலிகான் உள்ளிட்ட பிரபலங்கள் நடிக்கின்றனர்.

ஏற்கனவே அர்ஜுன் உடன் இருக்கும் காட்சிகளின் படப்பிடிப்பை முடித்த விஜய், தற்போது மன்சூர் அலிகான் உடன் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இணைந்துள்ளார். இந்த நிலையில் 90களில் வில்லனாக மிரட்டி விட்ட மன்சூர் அலிகான் நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் சங்கம் துருப்பிடித்து கிடப்பதை ஆவேசத்துடன் தெரிவித்து இருக்கிறார். அதாவது நடிகர் சங்கத்தின் சார்பாக சமீபத்தில் மறைந்த கஜேந்திரன், மயில்சாமி, மனோபாலா ஆகிய மூவருக்கும் நினைவேந்தல் நிகழ்வானது தி நகர் சர் பி.டி தியாகராஜன் மஹாலில் நடைபெற்றுள்ளது.

Also Read: ரொமான்ஸுக்காக 15 மணி நேரம் தவம் கிடந்த இயக்குனர்.. பொறுப்பில்லாமல் தூங்கிய விஜய், த்ரிஷா

அந்த நிகழ்ச்சியில் வழக்கம் போல் தன் பணியில் பேசிய மன்சூர் அலிகான் எல்லாத்தையும் மறைமுகமாக போட்டு உடைத்து விட்டார். அது மட்டுமல்ல அவர் மறைமுகமாக கோலிவுட்டின் பெரிய தலைகளுக்கு ஆப்பு வைக்கும் விதமாக குத்தி பேசி இருக்கிறார். இப்படி தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து மறைந்த மூன்று கலைஞர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வை நடத்தியதன் மூலம் தான், இன்னமும் தென்னிந்திய நடிகர் சங்கம் செயல்பட்டுக் கொண்டிருப்பதாக நம்ப முடிகிறது என்று மன்சூர் அலிகான் கிண்டல் அடித்தார்.

அதிலும் மனோபாலா அண்ணனுடன் நான் நிறைய குசும்பு செய்வேன். அது அனைத்தும் கதாநாயகிகளுக்கும் தெரியும் என்று மனோபாலாவை நினைவு கூர்ந்தார். தமிழ் சினிமாவில் தற்போது இருக்கும் டாப் நடிகர்கள் 50 கோடி, 100 கோடி சம்பளம் வாங்குகிறார்கள். ஆனால் நடிகர் சங்கத்தை துருப்பிடிக்க வச்சிருக்காங்க. இது ஒரு மோசமான நிலை. நடிகர்களுக்கு ஒற்றுமை இல்லை என்று உண்மையை சொல்லி பெரிய நடிகர்களை ஒரு குத்து குத்தி விட்டார்.

Also Read: லியோ படத்தில் லோகேஷ் கொடுக்கும் அடுத்த சர்ப்ரைஸ்.. செண்டிமெண்டாக தாக்கிய தளபதி

ஆரம்பத்தில் விஷால் பொறுப்பேற்கும் போது நிறைய வாக்குறுதிகளை அள்ளி வீசினார். ஆனால் இப்பொழுது துருப்பிடித்து கிடைக்கிறது இந்த நடிகர் சங்கம் என ஆவேசமாய் பேசி விட்டார்.  பல அரசியல் சம்பவங்களை நடிகர் சங்கம் செய்தது. மிகப்பெரிய ஜாம்பவான்கள் வாழ்ந்த பூமி இது. மேலும் இந்த நடிகர் சங்க கட்டிடத்தில் இருந்த 25 தென்னை மரங்களுடன் வந்தவுடன் நான் பேசுவேன், விளையாடுவேன். ஆனால் இப்போது முடியவில்லை.

மீண்டும் நடிகர் சங்கம் செயல்பட வேண்டும் என்றும் மன்சூர் அலிகான் ஆதங்கத்துடன் பேசி இருக்கிறார். மேலும் மன்சூர் அலிகான் 100 கோடி சம்பளம் வாங்கும் பெரிய நடிகர்களை சுட்டிக்காட்டியதில் விஜய்யும் ஒருவர். அவருடன் தான் இப்போது லியோ படத்தில் நடித்து வருவதை மறந்து விடக்கூடாது என்றும் தளபதி ரசிகர்கள் இந்த பேட்டியை குறித்து விமர்சிக்கின்றனர்.

Also Read: வேறு எந்த படத்திலும் விஜய் செய்யாத விஷயம்.. லோகேஷையே மிரளவிட்ட தளபதி

Continue Reading
To Top