ரஜினி, விஜய், அஜித், சூர்யாவை குறி வைக்கும் டாப் ஹீரோக்கள்.. கொஞ்சம் மிஸ் ஆனாலும் மொத்தமும் சோலி முடிஞ்சிடும்

Kollywood vs Tollywood: ‘ராஜாவுக்கு ராஜா நான் தான், எனக்கு மந்திரிகள் யாருமில்ல’ என்று ரஜினி பாட்டு ஒன்னு இருக்கு. அப்படிதான் நம்ம சினிமாவின் டாப் ஹீரோக்கள் கெத்தாக சுற்றி கொண்டு இருந்தார்கள். ஆனா இப்போ அதெல்லாம் வேலைக்கு ஆகாமல் போய்விட்டது.

இப்ப சினிமா ரசிகர்களின் விருப்பம் என்பது பரந்த மனப்பான்மையோடு ஆகிவிட்டது. தமிழ் படம் தான் பார்ப்பேன், எங்க தலைவன் படம் தான் பார்ப்பேன்னு யாரும் குறுகிய மனப்பான்மையோடு யோசிப்பதில்லை. இது ஆரோக்கியமான சினிமாவிற்கு சாதகமான சூழ்நிலை தான்.

ஆனால் தமிழ் சினிமாவின் முக்கியமான ஹீரோக்களுக்கு இது சாதகமானதாக இல்லை. ரஜினி, விஜய், அஜித், சூர்யான்னு எல்லாருக்குமே ஒரு சேர பிரச்சனை கிளம்பி இருக்கிறது. இந்த 4 ஹீரோக்களுக்கும் அடுத்தடுத்து படங்கள் ரிலீசுக்கு காத்திருக்கின்றன.

ரஜினியின் வேட்டையின் அக்டோபர் மாதம் ரிலீஸ் ஆக இருக்கிறது. விஜய் நடிக்கும் GOAT படத்தை ஆகஸ்ட் மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருக்கிறார்கள். சூர்யாவின் கங்குவா படம் செப்டம்பர் மாதம் ரிலீஸ் ஆக இருக்கிறது. அஜித் நடிக்கும் விடாமுயற்சி படத்தை நவம்பர் மாதம் ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள்.

இப்ப இந்த 4 முக்கிய புள்ளிகளின் படங்களுடனும், தெலுங்கு சினிமாவின் டாப் ஹீரோக்களின் படங்கள் மோத இருக்கின்றன. கோலிவூட் vs டோலிவூட் என்ற பந்தய போர் ஆரம்பித்து இருக்கிறது.

கொஞ்சம் மிஸ் ஆனாலும் மொத்தமும் சோலி முடிஞ்சிடும்

இதில் விஜய்யின் GOAT படத்துடன் அல்லு அர்ஜுனின் ஹிட் படமான புஷ்பா படத்தின் 2ம் பாகம் ரிலீஸ் ஆக வாய்ப்பிருக்கிறது. சூர்யாவின் கங்குவா படத்துடன் பவன் கல்யாண் நடித்த ‘TheycallhimOG’ என்ற படம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரஜினி நடிப்பில் வெளியாக இருக்கும் வேட்டையன் பட ரிலீஸ் சமயத்தில், ஜூனியர் என்டிஆர் நடித்த தேவரா படம் ரிலீஸ் ஆகும். அதே போல் விடாமுயற்சி படத்துடன் ராம் சரண் நடித்த கேம் சேஞ்சர் படம் ரிலீஸ் ஆக அதிக வாய்ப்பிருக்கிறது.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் ரஜினி மற்றும் விஜய் க்கு முந்தய படங்கள் பெரிய அளவில் பேசப்படவில்லை. அதேபோல் சூர்யா மற்றும் அஜித்துக்கு கேப் அதிகமாகிவிட்டது. இதனால் இவர்களின் அடுத்த ரிலீஸ் என்பது தங்களை நிரூபித்த ஆக வேண்டும் என்ற நிலைமை தான்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் தெலுங்கு படங்களுடன் மோதி ஜெயிக்க முடியாமல் போனால் அதை விட பெரிய தர்ம சங்கடம் என ஏதுமில்லை.

முன்ன மாதிரி டைட்டில் கார்டு, பஞ்ச் டயலாக் வச்சு ரசிகர்களை ஏமாத்த முடியாது. தியேட்டர் வந்து படம் பாக்கணும்னா கதை முக்கியம் பிகிலுன்னு ரசிகர்கள் ஸ்ட்ரிக்ட்டாக இருக்கிறார்கள். நல்ல கதையம்சத்தோடு ரிலீஸ் ஆகி தமிழ் ரசிகர்களை கவர்ந்த மஞ்சும்மல் பாய்ஸ், ஆடு ஜீவிதம் போன்ற படங்கள் இதுக்கு பெரிய எடுத்துக்காட்டு.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்