வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

கணவரின் டார்ச்சரால் சினிமாவை விட்டெறிந்த 5 நடிகைகள்.. அட்ரஸே இல்லாத மெகா ஹிட் அஜித் ஹீரோயின்

Actress avoid cinema due to Husbands Torcher: பயணம் முடிந்த பின்னும் பாதை முடிவதில்லையே! என்பதைப் போல சில நடிகைகள் சில படங்களில் நடித்திருந்தாலும் அப்படத்தின் தாக்கம் பல காலங்களுக்கு நம் நினைவில் நின்று பேசும். நடிகைகள் சிலர் கொஞ்சம் எண்ணிக்கையிலான படத்தில் நடித்துவிட்டு திருமணமாகி செட்டில் ஆகிவிடுகின்றனர். திருமணத்திற்கு பின் ஏனோ தன் திறமைகளை மறைத்து குடும்ப வாழ்க்கையில் ஐக்கியமாகி விடுகின்றனர் அவர்களில் சிலர்,

காதல் மன்னன் மானு: “உன்னை பார்த்த பின்பு நான், நானாக இல்லையே!” என்று தமிழ் ரசிகர்கள் அனைவரும் திரும்பி பார்த்த நடிகை மானு. பரதநாட்டியம் மற்றும் கதக் நடன கலைஞரான மானு ஒரே படத்தில் ரசிகர்களின் ஹைப்பை எகிற வைத்துவிட்டு  பின் திரைத்துறையில் இருந்து மாயமானார்.  முன்னணி நடிகரின் ஆலோசனையினால் 16 வருடங்களுக்குப் பின் இவர் நடித்த “என்ன சத்தம் இந்த நேரம்” படமும் சரியாக  போகவில்லை.

நஸ்ரியா நசீம்:”எக்ஸ்பிரஷன் குயின்” என அழைக்கப்படும் நஸ்ரியா நசீம், “நேரம், ராஜா ராணி” போன்ற சில எண்ணிக்கையிலான படங்களில் நடித்திருந்தாலும்  தனது கியூட்  முகபாவனைகளால் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்  பிடித்தவர். 2014 ல் பகத் பாசிலை திருமணம் செய்து கொண்டார். ரசிகர்கள் இவரை நடிக்க வைக்க கணவர் பகத் பாசலிடம் பலவாறு வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

பிரீத்தா விஜயகுமார்: “படையப்பா, சுயம்வரம், பொண்ணு வீட்டுக்காரன்” போன்ற படங்களில் நடித்த பிரீத்தா விஜயகுமார் தெலுங்கில் முன்னணி நடிகையாகவலம் வந்து கொண்டிருந்த காலத்தில் சிங்கம் புகழ் டைரக்டர் ஹரியை காதல் திருமணம் செய்தார். திருமணத்திற்கு பின் சினிமாவில் இருந்து விலகினார். இவருக்கு மூன்று ஆண் குழந்தைகள் உள்ளனர்.

Also Read:அவன் கோடீஸ்வரன் என காசுக்காக மட்டும் புருசனை வளைத்து போட்ட 5 நடிகைகள்.. ஜெயில் வரை சென்ற மகாலட்சுமியின் ராசி

ஸ்ரீதேவி:  நட்சத்திர தம்பதிகள் ஆன சுஜாதா விஜயகுமாரின் மூன்றாவது மகள் மற்றும் வனிதா,பிரீத்தாவின் தங்கை ஸ்ரீதேவி தித்திக்குதே படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் அனைவருக்கும் பரிச்சியமானவர்.  2009 இல் ராகுல் என்பவரை திருமணம் செய்து செட்டில் ஆகிவிட்டார். பிரீத்தா மற்றும் ஸ்ரீதேவி இருவரும் அடிக்கடி தங்கள் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு ரசிகர்கள்  நெஞ்சங்களை விட்டு அகலாத வண்ணம் உள்ளனர்.

சாயிஷா: பலமான இந்தி பின்னணியுடன் நுழைந்த சாயிஷா தமிழ்,தெலுங்கு,ஹிந்தி என பலமொழிகளிலும் முன்னணி கதாநாயகர்கள் பலருடனும் நடித்த வந்தார். 2019ல் நடிகர் ஆர்யாவை காதல் திருமணம் செய்தார். திருமணத்திற்கு பின்னும் டெடி இல் இருவரும் சேர்ந்தே நடித்திருந்தனர் படத்தின் போதே இவர் கர்ப்பமாக இருந்தார் என்பது கூடுதல் செய்தி.  சமீபத்தில் வெளியான பத்து தல படத்தில் ஒரு குத்து பாடலுக்கு குத்தாட்டம் போட்டிருப்பார் சாயிஷா.

Also Read:விவாகரத்துக்கு பின் அயன் லேடி ஆக மாறிய 5 நடிகைகள்.. பூமர் அங்கிள்சை ஓடவிட்ட அமலா பால்

- Advertisement -

Trending News